பக்கம்:சாவி-85.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் அமைதியாகக் கேட்ட கலைஞர், அப்படியா? அண்ணா கையில் புத்தகம் இல்லையா? பார்த்தீர்களா? என்று கேட்டார். பார்த்தேன். இல்லை என்றார் சாவி. புத்தகம் இல்லாதபோது மூக்குக் கண்ணாடி எதற்கு? என்று மறு கேள்வி போட்டு சாவியைக் குபிரெனச் சிரிக்க வைத்து விட்டார் கலைஞர். சாவியின் அறுபதாவது பிறந்த நாள் விழா சென்னை ஏ.வி.எம். திருமண மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. கலைஞர் அவர்கள் அந்த விழாவுக்குத் தலைமையேற்க ஒப்புக் கொண்டிருந்தார். ஆனால், விழா நாளன்று காலை சற்று உடல்நலக் குறைவால் கலைஞர் அவர்கள் கலந்து கொள்ள இயலாத நிலை என்று சாவி அவர்களுக்கு ஒரு செய்தி கிடைத்தது. மிகுந்த ஏமாற்றத்துக்குள்ளான சாவி உடனே கலைஞருக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பினார். 'திரிபுரா காங்கிரஸ் மாநாட்டின்போது சுபாஷ் சந்திர போஸுக்கு 104 டிகிரி காய்ச்சல். ஆனால் அந்த முடியாத நிலையிலும் காரில் ஊர்வலமாகச் சென்று மாநாட்டில் கலந்து கொண்டார். தங்களுக்கு உடல்நிலை சரியில்லையென்றாலும் விழாவில் எப்படியாவது வந்து கலந்து கொண்டாக வேண்டும்' என்று அக்கடிதத்தில் நட்புரிமையுடன் எழுதியிருந்தார். அன்று மாலையில் நடைபெற்ற விழாவுக்குக் கலைஞர் வந்துவிட்ட போதிலும் மிகுந்த சோர்வுடன் காணப்பட்டார். பேசும்போது இன்று எனக்கு வயிற்றுப் போக்காக இருந்தது. ஒரே இடத்தில் தொடர்ந்து இருக்க முடியாத நிலை. சாவி ஒரு கடிதம் எழுதி அதில் திரிபுரா மாநாட்டில் சுபாஷ் 247

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/265&oldid=824701" இலிருந்து மீள்விக்கப்பட்டது