பக்கம்:சாவி-85.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் படாததால்தான் சொல்லி அனுப்பவில்லை. ஆனால் அவரோ கட்டுரையைப் படித்துவிட்டு தாமாகவே என்னைப் பார்க்க வந்தது கண்டு நான் நெகிழ்ந்து போனேன். கலைஞர் பேச்சுக் இடையில் உங்களைப் பார்த்தால் ஹார்ட் ஆபரேஷன் ஆனவர் போலவே தெரியவில்லை. (சில வாரங்களுக்கு முன்புதான் ஆபரேஷன் ஆகியிருந்த) குடியரசுத் தலைவர் ஜெயில்சிங்கைப் பாருங்கள். இதயத்தை ஜாக்கிரதையாகக் கையில் தாங்கிப் பிடித்துக் கொண்டு எவ்வளவு கவனமாக நடக்கிறார், தெரியுமா? என்று சொல்லி ஜெயில்சிங் நடப்பதைப் போலவே நடந்து காட்டினார். கலைஞர் நடந்து காட்டிய அந்தக் காட்சி இப்போதும் என் கண்முன் தெரிகிறது என்கிறார் சாவி. ஒரு நாள் சாவி கலைஞரைப் பார்க்கப் போயிருந்தார். கலைஞர் மூன்றாவது முறையாக முதலமைச்சர் பதவி ஏற்றிருந்த சமயம் அது. 'அக்கிரகாரத்து அதிசய மனிதர் என்று அறிஞர் அண்ணா அவர்களால் அழைக்கப்பட்ட வ.ரா. அவர்களிடம் கலைஞர் நிறைந்த மதிப்பு வைத்திருந்தார். வ.ரா. காலமாகி விட்டபின் அவரது மனைவி மிகுந்த சிரமதசையில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருந்தார். இதுபற்றி சாவி கலைஞருக்கு ஞாபகப்படுத்தி அந்த அம்மாளுக்கு நீங்கள் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். - . . 'சரி; இப்போதே போய் அந்த அம்மாளிடம் ஒரு அப்ளிகேஷன் எழுதி வாங்கி வாருங்கள். ஆயிரம் ரூபாய் பென்ஷன் தர ஏற்பாடு செய்கிறேன் என்றார் கலைஞர். r உடனே புறப்பட்டுப் போய் அப்ளிகேஷன் எழுதி வாங்கி வந்து கலைஞரிடம் கொடுத்தார் சாவி, 249

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/267&oldid=824705" இலிருந்து மீள்விக்கப்பட்டது