பக்கம்:சாவி-85.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 அந்த நிமிஷமே பென்ஷனுக்கு உத்தரவு போட்டு விட்டார் கலைஞர். கலைஞரின் நெஞ்சுக்கு நீதி, குறளோவியம் இரண்டையுமே சாவி தினமணி கதிரில் வெளியிட்டார். நெஞ்சுக்கு நீதி இல் வாரங்கள் குமுதத்தில் வெளிவந்து பின்னர் சில காரணங்களால் நின்று போனபோது, ஒரு பத்திரிகையில் வந்த அந்தத் தொடரை தம் பத்திரிகையில் வாங்கிப் போடுவது பண்பான செயல் ஆகாது என்று சாவி கருதினார். ஆயினும், சாவி நான் கதிரில் மீதியை வெளியிடுகிறேன் என்று முன் வந்தது கலைஞரின் மீது அவர் கொண்டிருந்த நட்பின் ஆழத்துக்கு எடுத்துக்காட்டு என்றே சொல்ல வேண்டும். "கலைஞரின் 'நெஞ்சுக்கு நீதி கட்டுரை பாதியில் நின்று போனபோது அதை தினமணி கதிரில் வெளியிட முன்வந்தது பற்றி பொதுஜன அபிப்ராயம் பலவாறு இருந்தது. எனினும் அதைத் துணிந்து வெளியிட்டவர் சாவி' என்று பிரபல விமரிசகர் சுப்புடு 'சாவி மணி விழா மலரில் எழுதிய கட்டுரையில் பாராட்டி இருக்கிறார். குறளோவியத்துக்கு கலைஞரின் பேனாவும் கோபுலு அவர்களின் தூரிகையும் அமைத்த கூட்டணி கதிரின் விற்பனையை உயர்த்தியது உண்மை. கலைஞர் அவர்கள் ஒரு நாள் சாவியை போனில் அழைத்து, "பேசி ரொம்ப நாளாச்சு. எப்படி இருக்கிறீர்கள்?' என்று விசாரித்தார். கால் வலிதான். வீங்கிப் போயிருக்கிறது என்றார் சாவி, 'அப்படியா? அதற்கு ஒரு தைலம் இருக்கிறது. அதை வாங்கிப் பூசுங்கள் என்றார் கலைஞர். பத்து நாட்களுக்குப் பின் முதல்வர் கொடுத்தனுப்பிய 250

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/268&oldid=824707" இலிருந்து மீள்விக்கப்பட்டது