பக்கம்:சாவி-85.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் மூட்டு வலி எண்ணெயைக் கொண்டு வந்த கார் டிரைவர், ஐயா கொடுத்துட்டு வரச் சொன்னாங்க" என்று தெரிவித்து விட்டுப் போனார். சாதாரணமாக உரையாடிக் கொண்டிருந்தபோது கால் வலி' என்று சொன்னதை அவ்வளவு அக்கறையாக கவனத்தில் வைத்து, பாண்டிச்சேரி போயிருந்தபோது அந்த எண்ணெயை ஞாபகமாக வாங்கி வந்து கொடுத்த கலைஞரின் அன்பு சாவியை நெகிழ வைத்தது. டெலிபோனில் நன்றி சொன்னபோது, பாண்டிச்சேரி போயிருந்தேன். இந்த எண்ணெய் நல்லது என்று சொன்னார்கள். உங்கள் கால் வலி நினைவு வந்தது. உடனே வாங்கி வந்தேன்' என்றார் கலைஞர். மிகச் சமீபத்தில் கலைஞர் தலைமையிலான தமிழக அரசு சாவிக்கு பெசன்ட் நகரில் ஒரு வீட்டுமனை ஒதுக்கியது. ஆனால் அதில் சில சட்டச் சிக்கல்கள் இருந்ததால் கலைஞரிடம் போய் இந்தச் சிக்கல்களை விரைவாக விலக்கிக் கொடுத்தால் இந்த வயதான காலத்தில் சின்னதாய் ஒரு வீடு கட்டிக் கொண்டு அமைதியாக ஒய்வெடுப்பேன் என்றார் சாவி. 'உங்களுக்கு என்ன வயதாகிறது?’ என்று கேட்டார் கலைஞர். 'எண்பத்தைந்து என்றார் சாவி. 'இந்த வயதில் உங்களுக்குச் சின்ன வீடு கேட்கிறதா?” என்று கலைஞர் கேட்டதும் சாவி குபிரென்று சிரித்து விட்டார். உடுக்கை இழந்தவன் கை போல ஆங்கே இடுக்கண் களையும் நட்புக்கு சாவியைப் பொறுத்தவரை கலைஞரைத் தவிர வேறு உதாரணம் இல்லை. 'இப்படி ஒரு முறையல்ல; இரண்டு முறை எனக்கு நேர்ந்த இடுக்கண்களைக் களைந்திருக்கிறார் கலைஞர்" என்கிறார் சாவி, * ・ド 251

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/269&oldid=824709" இலிருந்து மீள்விக்கப்பட்டது