பக்கம்:சாவி-85.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. கதிர் ஆசிரியர் யார்? தினமணி கதிரில் சாவி வேலைக்குச் சேர்ந்தபோது அதன் ஆசிரியராகத்தான் சேர்ந்தார். ஆனால் பல 'மாதங்களாகியும் ஆசிரியர் சாவி என்று அவர் பெயரைப் பத்திரிகையில் வெளியிடாமலேயே காலம் கடத்தி வந்தார்கள். கேட்டால் பொருந்தாத சமாதானங்களையெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தது நிர்வாகம், சாவிக்கு இது மிகுந்த வேதனையைத் தந்தது. கோபம் பொங்கி வந்தபோதிலும், நிதானம் இழக்காமல் பொறுமையாக இருந்தார். நிர்வாகம் இதோ அதோ என்று சால்ஜாப்பு சொல்லிக் கொண்டிருந்த அதே நேரத்தில் ஆசிரியர்: சிவராமன் என்று மட்டும் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருந்தது. தினமணி அலுவலகத்தில் சிவராமன் கோஷ்டி தனக்கு எதிராகச் செயல்பட்டு வருவது சாவி அவர்களுக்குத் தெளிவாகவே தெரிந்து போயிற்று. ஆனாலும் பொறுத்தவர் பூமி ஆள்வார் என்கிற தத்துவத்தைக் கடைப்பிடித்தார் சாவி. 'நான் தினமணி கதிர் எடிட்டராக வருவது ஆசிரியர் சிவராமன் அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்பது உறுதியாகத் தெரிந்தது. முடிந்தபோதெல்லாம் என் செயல்பாடுகளுக்கு அவர் முட்டுக்கட்டை போட்டுக் கொண்டே இருந்தார். சிவராமன் அவர்களின் அறிவாற்றலிலும் அரசியல் ஞானத்திலும் எனக்கு மிகுந்த மதிப்பு உண்டு. ஹிண்டு ரகுநாதய்யருக்கு ஒப்பான அறிவாளி அவர் என்பதால் அவரிடம் மிகுந்த மதிப்பும் 252

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/270&oldid=824713" இலிருந்து மீள்விக்கப்பட்டது