பக்கம்:சாவி-85.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் மரியாதையும் வைத்திருந்தேன். ஆனால் சந்திரன்கூட தூரத்தில் இருந்து பார்க்கும் போதுதான் அழகாயிருக்கும். கிட்டத்தில் நெருங்கினால் கரடுமுரடாகத்தான் இருக்கும் என்பதும் எனக்குத் தெரியும். சிவராமனிடம் நெருங்கிப் பழகியபோதும் அப்படித்தான் உணர்ந்தேன். என் விஷயத்தில் அவர் ஒரு சட்டாம்பிள்ளை போல் நடந்து கொண்ட முறை எனக்குப் பிடிக்கவில்லை. ஆசிரியர் சிவராமன் விருப்பத்துக்கு மாறாக என் பெயரை இம்ப்ரிண்ட்டில் போடுவதற்கு தைரியமில்லாததால்தான் 'இதோ அதோ என்று பகவான்தாஸ் கோயங்கா சாக்குப் போக்குச் சொல்லி இழுத்தடித்துக் கொண்டிருந்தார் என்பது தெளிவாகவே தெரிந்தது. இதற்கிடையில் சிவராமன் அவர்கள் தான் தினமணியில் எழுதி வரும் கணக்கன் கட்டுரைகள் அப்படியே தினமணி கதிரிலும் வெளியாக வேண்டும் என்று கருதினார். அதிகாரப் பூர்வமான ஆசிரியராக நான் அங்கீகரிக்கப்படாதவரை சிவராமன் கட்டுரைகளை நிராகரிக்கும் அதிகாரம் என்னிடம் இல்லை. 'தினமணி நாளிதழுக்கு அந்தக் கட்டுரைகள் மிகப் பொருத்தமானவையே. நானேகூட அந்தக் கட்டுரைகளை ஆர்வத்தோடு படிப்பதுண்டு. ஆனால் அவ்வளவு கனமான விஷயங்களை கதிர் வாசகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதால் அவற்றை வாசகர்கள் தலையில் கட்டுவதை நான் விரும்பவில்லை. என் விருப்பத்திற்கு மாறாகவே நான் அக்கட்டுரைகளைத் தொடர்ந்து பிரசுரிக்க வேண்டியதாயிற்று. கதிர் வாசகர்களும் அதைப் படிக்க வேண்டும் என்பது சிவராமன் ஆசை. 'எப்படி இதை நிறுத்துவது என்பது பற்றி நான் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்த சமயம் ஒருநாள் பி.டி.கோயங்கா (சின்னவர்) என்னைக் கூப்பிட்டனுப்பினார். காஞ்சிபுரத்தில் நமது ஏஜெண்டுகள் 253

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/271&oldid=824715" இலிருந்து மீள்விக்கப்பட்டது