பக்கம்:சாவி-85.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 மீட்டிங் ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறேன். சர்க்குலேஷன் மானேஜர் திருமதி டேனியல் தலைமையில் அக்கூட்டம் நடை பெறும் நீயும் அங்கே போய் தினமணி கதிர் பற்றி ஏஜெண்டுகள் என்ன கருத்து சொல்கிறார்கள் என்று அறிந்து வா என்றார். காஞ்சிபுரம் கூட்டத்துக்குச் சுற்றுப்புற ஊர்களிலிருந்து பல ஏஜெண்டுகள் வந்திருந்தனர். வந்தவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டு "ஐயா, இந்தக் கணக்கன் கட்டுரைகளைப் போடாதீங்க. அதை யாரும் படிக்கறதில்லை" என்றார்கள். 'உங்கள் கருத்தை அந்த அம்மாவிடம் (மிஸஸ். டேனியல்) சொல்லுங்கள். என்னிடம் சொன்னால் போதாது” என்று அவர்களிடம் சொன்னேன். கணக்கன் கட்டுரைகளை வாசகர்கள் விரும்பவில்லை என்று ஏஜெண்டுகள் சொல்வதாக அந்த அம்மாள் குறிப்பு எழுதிக் கொண்டு போய் பி.டி.கோயங்காவிடம் சொல்லி இருக்கிறார். மறுநாளே பி.டி.கோயங்கா என்னை அழைத்து கணக்கன் கட்டுரையை நிறுத்தி விடு' என்றார். நான் நிறுத்தி விட்டேன். சில நாட்கள் கழித்து வேறொரு விதமாக சிவராமன் தலையீடு ஆரம்பமாயிற்று. 'தினமணி'யில் அவர் எழுதும் தலையங்கங்களை தினமணி கதிரில் வெளியிட வேண்டிய புது நிர்ப்பந்தம் ஏற்பட்டது. பகவான்தாஸ் கோயங்கா என்னைப் பார்க்க விரும்புவதாக ஜெனரல் மானேஜர் டி.கே.டி. என்னை கோயங்கா அறைக்கு அழைத்துச் சென்றார். கோயங்கா அன்று தலையங்கம் பற்றிப் பிரஸ்தாபித்து என்ன சொல்கிறாய்?" என்று கோபம் வராமலே கோபமாகப் பேசினார். நான் பொறுமை இழந்து விட்டேன். "இதோ பாருங்கள். தினமணி கதிருக்கு நான் தான் எடிட்டர். எது போட வேண்டும், எது கூடாது என்பதை முடிவு செய்ய வேண்டியவன் நான். தினமணி நாளேட்டில் 254

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/272&oldid=824717" இலிருந்து மீள்விக்கப்பட்டது