பக்கம்:சாவி-85.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் இதுளியான தலையங்கங்களை நான் கதிரில் போடுவதற்குத் தயாராயில்லை" என்று கண்டிப்பும் கறாருமாகச் சொல்லி ஆட்டேன். என் உத்தியோகத்துக்குச் சீட்டு கிழிந்து விடும் அன்றே பலரும் எதிர்பார்த்தார்கள். நானும் அப்படித்தான் நினைத்தேன். ஆனால் என்ன நடந்தது தெரியுமா டி.கே.டி. அறையை விட்டு அப்பால் போனதும் கோயங்கா என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே எழுந்தார். எழுந்தவர் என் முதுகில் தட்டிக் கொடுத்து போய் உன் வேலையைப் பார் என்றார். அடுத்த வாரமே தினமணி கதிரில் இம்ப்ரிண்ட்டில் ஆசிரியர்: சாவி என்று அச்சிடப்பட்டிருந்தது.' அந்த அனுபவத்தை என்னிடம் சொல்லிப் பெருமூச்சு விடும் சாவி, என்னால் என்றுமே மறக்க முடியாத நாள் அது' என்கிறார். 255

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/273&oldid=824719" இலிருந்து மீள்விக்கப்பட்டது