பக்கம்:சாவி-85.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் எம்.ஜி.ஆர். படத்தை அட்டையில் வெளியிட வேண்டும்' என்று நிர்வாகமும் தொடர்ந்து சாவி அவர்களுக்குப் பல்வேறு முனைகளிலிருந்து நிர்ப்பந்தம் தந்து கொண்டே இருந்தது. இதில் மிகவும் தீவிரம் காட்டியவர் ஸ்பெஷல் ஆபீசர் ஆர்.ராமகிருஷ்ணன். "இதோ பாருங்கள் எத்தனை முறை யார் மூலம் வந்து கேட்டாலும் என் பதில் ஒன்றேதான். நான் ஆசிரியராக இருக்கும்வரை தினமணி கதிர் அட்டையில் எம்.ஜி.ஆரின் படம் வராது' என்று ஒரே அடியாக மறுத்து விட்டார் சாவி, இதற்கிடையில் சாவி அவர்கள் தம் குடும்பம் தொடர்பான ஒரு முக்கிய வேலையாக அமெரிக்கா செல்ல் வேண்டியதாயிற்று. தாம் ஊரில் இல்லாதபோது சூழ்ச்சி நடக்கும் என்பது சாவிக்குத் தெரியாததல்ல. ஆனாலும் அவர் அமெரிக்கா போன் வேண்டிய கட்டாயம் இருந்ததால் புறப்பட்டுச் சென்றார். எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் சிறப்பு அதிகாரி ராமகிருஷ்ணன் அவர்களிடம் சொல்லி அனுமதி பெற்ற பிறகே சாவி அமெரிக்கா போனார். திரு. ராமகிருஷ்ணனும் எந்த ஆட்சேபனையும் சொல்லாமல் சந்தோஷமாகவே அனுப்பி வைத்தார். இதுதான் தக்க தருணம் என்று எண்ணி சாவி ஊரில் இல்லாததைப் பயன்படுத்திக் கொண்டு தினமணி கதிர் அட்டையில் எம்.ஜி.ஆர். படத்தைப் போட நிர்வாகம் (plg. 6); செய்துவிட்டது. அதே சமயம் கூடவே சாவி அவர்களையும் பதவியிலிருந்து நீக்கிவிடுவது என்றும் முடிவு எடுத்தது. சாவி ரிடயர் ஆகவேண்டிய வயதைக் கடந்து, மேலும் இரண்டாண்டுகள் ஆகிவிட்டதால் அதையே ஒரு சாக்காகச் சொல்லி அவரைப் பதவியிலிருந்து நீக்கி இருப்பதாக வீட்டுக்குக் கடிதம் அனுப்பி விட்டார்கள். சாவி தினமணி கதிரிலிருந்து வெளியேற்றப்பட்டதற்கு எம்.ஜி.ஆர். அட்டைப்பட விவகாரம்தான் ஒரே காரணம் என்று சொல்லத் தேவை இல்லை. 257

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/275&oldid=824723" இலிருந்து மீள்விக்கப்பட்டது