பக்கம்:சாவி-85.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 இருந்து சமீபத்தில் காலமாகிவிட்ட அதே ஆடிட்டர் குமார்தான்) அவர்களும் சாவியின் வீட்டுக்கு வந்தார்கள். மாதப் பத்திரிகை தொடங்குவது பற்றி ரொம்ப நேரம் சாவியோடு விவாதித்தார்கள். பின்னர் மோனா என்ற பெயரில் மாத நாவல் பத்திரிகை தொடங்குவதென்று முடிவாயிற்று. சாவி மறுநாளே கலைஞர் அவர்களைச் சந்தித்து மோனா மாத இதழ் பற்றி விவரமாகச் சொல்லி அந்தப் பெயரில் தான் சொந்தமாக மாத இதழ் நடத்துவதற்கான அனுமதியும் பெற்று விட்டார். 'குங்குமம்' பத்திரிகையில் பல புதுமைகளைப் புகுத்தி வெற்றிக் கொடியை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒருநாள் எழுத்தாளர்கள் சுப்பிரமணிய ராஜூவும், பாலகுமாரனும் சாவியைக் காண குங்குமம் அலுவலகத்துக்கு வந்தார்கள். குங்குமம் பத்தோடு பதினொன்றாகத்தானே இருக்கிறது? உங்கள் பத்திரிகையில் என்ன புதுமை பண்ணிக் கிழித்து விட்டீர்கள் என்றெல்லாம் பேசி சாவியைச் சீண்டி விட்டார்கள். இருவருமே சாவிக்கு நெருக்கமானவர்கள்தான். அதனால் உரிமையோடு பேசி இருக்கிறார்கள். 'பாலா, ராஜு... வாரப் பத்திரிகை நடத்துவது நீங்க நினைக்கிற மாதிரி அத்தனை எளிதல்ல" என்றார் சாவி. அவர்களிருவரும் தங்கள் வாதத்துக்கு அழுத்தம் கொடுத்துப் பேசியதும் சாவி அவர்களுக்கு ஒரு யோசனை உதித்தது. சட்டென ஒரு முடிவெடுத்து அவர்களிடம் சொன்னார்: "இத பாருங்க... ஒரு மாசம் டைம் தருகிறேன். குங்குமம் இதழை ஒரே ஒரு வாரம் நீங்க தயார் பண்ணிக் காட்டுங்க. நான் கொஞ்சமும் தலையிட மாட்டேன். செய்கிறீர்களா?" என்று சவால் போல் கேட்டார். 264

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/282&oldid=824737" இலிருந்து மீள்விக்கப்பட்டது