பக்கம்:சாவி-85.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 ஆஃப்செட் அச்சு எந்திரம் வாங்கும் அளவுக்கு சாவிக்கு தைரியம் பிறந்தது. அப்போது சென்னை அமைந்தகரையில் அருண். ஹோட்டல் கட்டிடத்தின் கீழ்த் தளத்தில் சாவி அலுவலகம் இயங்கி வந்தது. பூஜை போட்ட முதல் நாளிலிருந்தே சாவி இதழோடு நெருங்கிப் பணிபுரியும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. வாரத்தில் சில மணி நேரங்களில் சாவி இதழை அச்சடித்து முடித்து விடும் அந்த ஆஃப்செட் மெஷின் மற்ற நேரங்களில் சோம்பேறி'யாகவே உறங்கிக் கிடக்கும். அதற்கு முழு நேர வேலை தரவேண்டும் என்கிற நோக்கத்தில் இன்னும் சில பத்திரிகைகளையும் தொடங்கி நடத்த முடிவு செய்தார். இன்றைய ஜூனியர் விகடன் போன்ற புலனாய்வு பத்திரிகை களுக்கெல்லாம் முன்னோடி என்று சொல்லக்கூடிய 'விஸிட்டர் லென்ஸ் பத்திரிகையைத் தொடங்கினார். புதிய பத்திரிகைகளைத் தொடங்கி அவற்றின் பொறுப்பைத் தனித்தனி ஆசிரியர்களிடம் ஒப்படைத்து அவர்களின் உரிமையில் தலையிடாமல் அதே சமயம் அந்தப் பத்திரிகைகளின் தரத்தைக் கண்காணித்து வந்தார். 'சுஜாதா என்ற சினிமா மாத இதழுக்கு திரு. பாரி வள்ளலையும் விசிட்டர் லென்ஸுக்கு ஆனந்த் அவர்களையும் ஆசிரியராக்கினார். அந்தக் காலகட்டத்தில் சாவி அவர்கள் தொடங்கிய இன்னொரு வித்தியாசமான பத்திரிகை 'திசைகள். அதன் ஆசிரியர் பொறுப்பை எழுத்தாளர் மாலனிடம் ஒப்படைத்தார். தமிழகத்தின் மாவட்டங்கள் தோறும் திசைகளுக்கென நிருபர்களை நியமித்துப் பல்வேறு இடங்களிலிருந்தும் சுவையான கட்டுரைகள் வந்து சேர ஏற்பாடு செய்யப்பட்டது. சாவி நிறுவனத்திலிருந்து வெளியான மற்றொரு பத்திரிகை 'பூவாளி. இது ஆங்கிலத்தில் வெளியாகும் ரீடர்ஸ் டைஜஸ்ட்” பத்திரிகை போன்ற தோற்றமும் பொருளடக்கமும் கொண்டது. 268

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/286&oldid=824747" இலிருந்து மீள்விக்கப்பட்டது