பக்கம்:சாவி-85.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் ஒவ்வொரு மாதமும் வெளியான பூவாளியின் ஒவ்வொரு இதழும் ஒரு பொக்கிஷம் என்று சொல்லலாம். உலகின் முக்கிய வார மாத இதழ்களையெல்லாம் தேடிப் பிடித்து அந்த இதழ்களை ஒவ்வொன்றாகப் புரட்டி அவற்றிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த கதை கட்டுரைகளைத் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடும் பொறுப்பு என்னிடம் தரப்பட்டது. பூவாளியின் விலை பத்து ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டது. இதற்கென மொழி பெயர்ப்பாளர்கள் குழு ஒன்றையும் சாவி உருவாக்கினார். அவர்களுக்கு இந்த வெளிநாட்டுப் பத்திரிகைகளைப் பிரித்துக் கொடுத்து, யார் யார் எதை எதை மொழி பெயர்த்துத் தர வேண்டும் என்று பட்டியலிட்டு பின்னர் உரிய நேரத்தில் அவற்றை வாங்கி அச்சுக்குக் கொடுக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார். 'பூவாளி எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. 'திசைகள் பத்திரிகையும் சரியாக நடக்காததால், எல்லாமாகச் சேர்ந்து பெரும் நஷ்டத்தில் கொண்டு விட்டது. இப்படி, பத்திரிகைகளைத் தொடர்ந்து நஷ்டத்தில் நடத்திக் கொண்டிருக்க சாவி க்ரோர்பதியா என்ன? 'சாவி, மோனா இதழ்களைத் தவிர மற்ற எல்லா துணைப் பத்திரிகைகளையும் நிறுத்த வேண்டியதாயிற்று. பத்திரிகைகளால் ஏற்பட்ட நஷ்டம், ஆஃப்செட் மெஷின் வாங்குவதற்காக சிண்டிகேட் வங்கியில் வாங்கிய கடன் இந்த இரண்டினால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க சாவி பெரும் பாடுபட வேண்டியதாயிற்று. சாவி அவர்களோடு நானும் ஒரு முறை ஜப்பான் சென்றிருந்தேன். டோக்கியோ டய்ச்சி ஒட்டலில் தங்கியிருந்த நாங்கள் சாப்பாட்டுக்காக நாயர் உணவு விடுதிக்குப் போயிருந்தோம். 269

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/287&oldid=824749" இலிருந்து மீள்விக்கப்பட்டது