பக்கம்:சாவி-85.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 மிகச் சின்ன இடம்தான். ஆனாலும் புகழ்பெற்ற இந்திய உணவு விடுதி அது. அதை நடத்தி வந்த நாயர்ஸான் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர். அவரது நாயர் என்ற பெயரோடு 'ஸான் என்ற மரியாதைச் சொல்லையும் சேர்த்து அழைப்பார்கள் (காந்திஜி, நேருஜி என்று ஜி சேர்த்துச் சொல்வதைப் போல்). சாவியின் அறிமுகம் கிடைத்தபோது நாயர்ஸான் மிகவும் மகிழ்ந்தார். ஓரிரு தினங்களிலேயே இருவரும் நட்பால் இணைந்து விட்டார்கள். நாயர்ஸான் வாழ்க்கை ஒரு வீர வாழ்க்கை. இந்திய விடுதலைப் போரைத் தென் கிழக்கு ஆசிய மண்ணிலிருந்து நடத்திய விடுதலைப் போராட்ட வீரர்களான ராஷ் பிஹாரி போஸ், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் போன்ற தலைவர்களோடு இணைந்து விடுதலைப் போருக்கு வியூகம் அமைத்தவர். ஜப்பான் வாழ் இந்தியர்களில் அவர்தான் மூத்தவர். திருமதி இந்திரா காந்தி அவர்கள் இந்தியப் பிரதமராக ஜப்பான் போயிருந்தபோது இந்திய சங்கத்தின் தலைவராக இருந்த நாயர்ஸ்ானைத் தனியாகச் சந்தித்துப் பேசினார் என்பது நாயர்ஸானுக்குள்ள தனிச்சிறப்பு. நாங்கள் ஜப்பான் சென்றிருந்தபோது நாயர்ஸான் தம்முடைய சுயசரிதையை ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருந்தார். அப்புத்த கத்தைத் தமிழிலும் வெளியிட வேண்டும் என்று நாயர்ஸான் விரும்பியபோது அப்பணியைச் செவ்வனே செய்து முடிக்க அவர் தேர்ந்தெடுத்தது சாவி அவர்களைத்தான். சாதனைகள் நிறைந்த நாயர்ஸான் வாழ்க்கையைத் தமிழில் மொழி பெயர்க்கும் அரிய வாய்ப்பு எனக்குத் தரப்பட்டது. சாவி சாருடன் நண்பராகிவிட்ட நாயர்ஸான் சாவியின் உழைப்பு, நேர்மை, நாணயம், திறமை மீது பெரும் நம்பிக்கை கொண்டிருந்தார். - - சாவியின் ஜப்பான் விஸிட் இந்த முதல் சந்திப்போடு நின்று விடவில்லை. அந்த நாட்டின் அகல நீளத்தை அடிக்கடி அளந்து கொண்டிருந்தார். அடுத்த சில ஆண்டுகளில் சாவி' இதழ் 270 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/288&oldid=824751" இலிருந்து மீள்விக்கப்பட்டது