பக்கம்:சாவி-85.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 கடன் வெள்ளம் தலைக்கு மேல் போய்க் கொண்டிருந்து நேரத்தில் சாவி அவர்களைக் கரையேற்றி விட்டவர் இந்தியன் வங்கியின் அன்றைய தலைவர் திரு. எம்.கோபாலகிருஷ்ணன் அவர்கள்தான். சாவியின் நாணயத்திலும் நேர்மையிலும் நம்பிக்கை வைத்து பத்து லட்சம் ரூபாய் கடன் சாங்ஷன் செய்தார். சிண்டிகேட் வங்கியில் வாங்கிய பத்து லட்சம் ரூபாய் கடன் வட்டியும் வட்டிக்குக் குட்டியுமாகச் சேர்ந்து பதினெட்டு லட்சம் ரூபாயாக வளர்ந்திருந்தது. இந்தியன் வங்கி தந்த பத்து லட்சத்தை உடனடியாக சிண்டிகேட் வங்கியில் கட்டியபோது மேலும் எட்டு லட்சம் ரூபாய் கட்ட வேண்டும் என்று கெடுபிடி செய்தார்கள். 'இந்த விஷயத்தில் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி என்னை இந்தக் கடனிலிருந்து மீட்டவர் திரு. மூப்பனார் அவர்கள் தான் என்று நன்றிப் பெருக்கோடு சொல்கிறார் சாவி. "பொருளாதார ரீதியாக என் சங்கடங்களைத் தீர்த்தவர்கள் மூன்று பேர். அந்த வகையில் நான் யாராவது மூன்று பேருக்கு சிலை வைக்க வேண்டுமென்றால் நாயர்ஸான், கோபாலகிருஷ்ணன், மூப்பனார் ஆகியவர்களுக்குத்தான் வைக்க வேண்டும்" என்று சாவி அடிக்கடி சொல்வதுண்டு. கலைஞர் அவர்களுக்கு சாவி ஏற்கெனவே நிரந்தரமாக ஒரு சிலையை அமைத்து விட்டார் என்பது ஊரறிந்த ரகசியம். அந்தச் சிலை சாவியின் இதயத்தில் நிரந்தரமாக இடம் பெற்றுள்ளது. கால வெள்ளத்தால் அழிக்க முடியாதது. 272

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/290&oldid=824754" இலிருந்து மீள்விக்கப்பட்டது