பக்கம்:சாவி-85.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44. நட்புக்கு இலக்கணம் சாவி - கலைஞர் நட்பின் பல்வேறு பரிமாணங்களை முந்தைய அத்தியாயம் ஒன்றில் நான் விவரமாகச் சொல்லி இருந்தாலும் அவற்றுக்கெல்லாம் சிகரமான ஒரு சம்பவத்தை இங்கே சொல்லியாக வேண்டும். 13.05.1992 தேதியிட்ட சாவியில் திரு. பி.கிருஷ்ணராஜ் என்கிற வாசகர் எழுதியிருந்த ஜோக் ஒன்றை சாவி அவர்கள் அட்டைப் படமாக வெளியிட்டார். முதலிரவு அறை. மணமகன் அந்தக் கட்டிலில் அமர்ந்திருக்க, மணப்பெண் நிர்வாணமாக மணமகன் முன் நின்று கொண்டிருப்பாள். அந்தப் பெண்ணின் உருவம் நிர்வாணமாகக் காட்டப்பட்டிருந்தபோதிலும் ஆபாசம் இல்லாத அளவுக்கு முதுகுப் பக்கம் மட்டுமே காட்டப்பட்டிருக்கும். கையில் பால் சொம்பு. இதுதான் ஜோக்குக்கான படம். 'அத்தைதான் உங்களுக்கு ஆடை'யில்லாம பால் தரச் சொன்னாங்க. ' இதுதான் அந்த ஜோக்குக்கான வசனம். இந்த அட்டைப் படத்தோடு வெளியான சாவி இதழ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது. வெறும் நகைச்சுவைக்காக போடப்பட்ட இந்த ஜோக் வெளியானதும் இது பெண் குலத்தையே அவமானப்படுத்துகிறது. இவ்வளவு முட்டாள்தனமாகவா ஒரு 273

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/291&oldid=824755" இலிருந்து மீள்விக்கப்பட்டது