பக்கம்:சாவி-85.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 பெண் நடந்து கொள்வாள் என்றெல்லாம் மாதர் சங்கங்கள் வரிந்து கட்டிக் கொண்டு எதிர்ப்பு தெரிவிக்க, இப்படிப்பட்ட ஆபாச ஜோக்கை வெளியிட்ட குற்றத்துக்காக ஜெயலலிதா முதல்வராக இருந்த அன்றைய அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின்போது சாவி அவர்கள் கைது செய்யப்பட்டார். அன்று மாலை நான் அண்ணாநகரில் சாவி அவர்கள் வீட்டில்தான் இருந்தேன். நான்கு மணி அளவில் ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த சிலர் சாவியின் வீட்டுக்கு எதிரில் கூடி நின்று கோஷங்கள் எழுப்பினார்கள். பின்னர் சங்கப் பிரதிநிதிகள் சிலர் வீட்டுக்குள் வந்து சாவி அவர்களைச் சந்தித்தபோது இது வெறுமனே ஒரு நகைச்சுவை துணுக்குதான். பெண்களை கேவலப்படுத்தும் நோக்கம் எனக்கில்லை என்று சாவி விளக்கியபோதிலும் அவர்கள் சமாதானம் அடையவில்லை. 'உங்களைப் போன்ற தேர்ந்த மூத்த பத்திரிகை ஆசிரியரிடமிருந்து இப்படியொரு அட்டைப்படத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. அதனால்தான் வேதனை என்று அவர்கள் சொன்னதும் 'வாருங்கள் என்று அவர்களையும் அழைத்துக் கொண்டு வாசலுக்கு வந்து வெளியே கோஷம் போட்டவர்களிடம் 'உள்நோக்கம் ஏதுமின்றி இயல்பாகப் போடப்பட்ட இந்த ஜோக் உங்கள் உணர்வுகளைப் பாதித்திருக்கிறது என்றால் ஐ ஆம் ஸாரி என்று வெளிப்படையாக வருத்தம் தெரிவித்தார். அப்புறம்தான் அவர்கள் கலைந்து சென்றார்கள். அத்துடன் முடிந்திருக்க வேண்டிய விவகாரம் அது. ஆனால் முடியவில்லை. சற்று நேரத்துக்கெல்லாம் ஒரு போலீஸ் ஜீப் வந்து நின்றது. உயர் அதிகாரிகள் இறங்கி வந்தார்கள். சாவி அவர்களையும், அப்போது சாவியில் உதவி ஆசிரியராக இருந்த திரு. ரவி பிரகாஷ், பத்திரிகையை அச்சிட்ட மணி என்பவரையும் கைது செய்து அண்ணா நகர் காவல் நிலையத்துக்குக் கொண்டு போனார்கள். அவர்களைத் தொடர்ந்து நானும் சாவி அலுவலகத்தைச் 274

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/292&oldid=824756" இலிருந்து மீள்விக்கப்பட்டது