பக்கம்:சாவி-85.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் சேர்ந்த சிலரும் அங்கே விரைந்தோம். சாவி, ரவி பிரகாஷ், மணி மூவரையும் போலீஸார் மாடிக்கு அழைத்துப் போனார்கள். இதற்குள் மாலை மங்கி இருட்டிப் போய் விட்டது. அங்கே மின் விளக்கு, மின் விசிறி எதுவுமே வேலை செய்யாததால் புழுக்கமாக இருந்தது. மாடி ஹாலில் மூவரையும் உட்கார வைத்துவிட்டு எல்லோரும் கீழே வந்து விட்டார்கள். நேரம் ஆக ஆக எனக்குப் பதட்டம் அதிகமானது. போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைவதே அதுதான் எனக்கு முதல் அனுபவம். அங்கு ஒரே கெடுபிடியாக இருந்தது. சாவி அவர்களை மேலே சென்று பார்க்கவும் அனுமதி இல்லை. அப்புறம் அரை மணி நேரத்துக்கெல்லாம் யாரும் எதிர்பாராத அந்த விந்தை நடந்தது! சர். சர்... என்று விரைந்து வந்த மூன்று கார்கள் அந்தக் காவல் நிலைய வளாகத்துக்குள் நிற்கவும் மறு வினாடி காரின் கதவுகள் திறக்கவும், முதலில் இறங்கி வந்தவர் கலைஞர் அவர்கள். தொடர்ந்து ஆற்காடு வீராசாமி, மாறன், ஆலடி அருணா, ஆயிரம் விளக்கு உசேன், சில வழக்கறிஞர்கள். கலைஞர் அவர்கள் உள்ளே வந்ததும் 'நீ மட்டும்தான் இருக்கியா? என்ன நடந்தது?" என்று என்னைக் கேட்கவும் நான் நடந்ததைச் சொன்னேன். போலீஸ் இன்ஸ்பெக்டரைப் பார்த்து இப்பவே நான் சாவியைப் பார்த்தாகணும். அவரை எங்கே வச்சிருக்கீங்க?' என்று கேட்டார் கலைஞர். போலீஸார் சரியான பதில் சொல்லாமல் இப்படியும் அப்படியும் ஒடி பாசாங்கு காட்டினார்கள். சிறிது நேரம் பொறுத்துப் பார்த்த கலைஞர் அவர்கள் யாருடைய பதிலுக்கும் காத்திராமல் வேகமாக மாடிப்படிகளில் ஏறி சாவி உட்கார்ந்திருந்த இடத்தை அடைந்தார்கள். கும்பலோடு சேர்ந்து நானும் மேலே போய்விட்டேன். அதுவரை அங்கே இருண்டு கிடந்த விளக்குகள் 275

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/293&oldid=824757" இலிருந்து மீள்விக்கப்பட்டது