பக்கம்:சாவி-85.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 பளிச்சென்று எரிய ஆரம்பித்தன. மின் விசிறிகள் சுழல ஆரம்பித்தன. ஏதோ திரைப்படத்தில் பார்ப்பது போலக் காட்சிகள் மாறிக் கொண்டே போயின. சாவி அவர்கள் அருகில் அமர்ந்து சிறிது நேரம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்த கலைஞர் 'இதெல்லாம் சாதாரண விஷயம், கவலைப்படாதீங்க. நான் பார்த்துக் கொள்கிறேன் என்று தைரியம் கூறிவிட்டு, ஆயிரம் விளக்கு உசேனிடம் தம் சட்டைப் பையில் இருந்து நூறு ரூபாய் நோட்டை எடுத்துக் கொடுத்து இவர்கள் மூவருக்கும் டிபன் வாங்கிக் கொடு என்றார். தம்முடன் அழைத்து வந்த வழக்கறிஞர்களிடம் சில உத்தரவுகளைப் பிறப்பித்த பிறகே காவல் நிலையத்தை விட்டுப் புறப்பட்டார். எங்கே போனார் தெரியுமா? நேராக சாவியின் வீட்டுக்குப் போய் திருமதி சாவி யிடம் ஜாமீனுக்கு ஏற்பாடு செய்து விட்டேன். கொஞ்ச நேரத்தில் வந்திடுவார். கவலைப்படாதீர்கள் என்று சொல்லித் தேற்றிய பின்புதான் தம் வீட்டுக்குப் போனார். இதற்கிடையில் சாவி, ரவி பிரகாஷ், அச்சக மணி மூவரையும் இரவு பத்து மணியளவில் மாஜிஸ்டிரேட் வீட்டுக்கு அழைத்துப் போய் அவரைத் தூக்கத்திலிருந்து எழுப்பி ஆபாச ஜோக் போட்டதற்காக இவர்களைக் கைது செய்திருக்கிறோம். என்று பதிவு செய்தவுடன், வழக்கறிஞர்கள் ஜாமீன் மனு தாக்கல் செய்ய அவர்களை ஜாமீனில் விடுதலை செய்தார் மாஜிஸ்ட்ரேட் 'சாவி கைது செய்யப்பட்டிருக்கிறார் என்ற செய்தி கிடைத்ததும் எந்த ஸ்டேஷனில் வைக்கப்பட்டிருக்கிறார் என்பதை விசாரித்துத் தெரிந்து கொண்டு, ஜாமீனில் எடுக்க முன்னேற்பாடுகளுடன் வழக்கறிஞர்களையும் அழைத்துக் கொண்டு வந்து, தேவையான ஏற்பாடுகளைப் பக்காவாகச் செய்து விட்டு, அங்கிருந்து சாவியின் வீட்டுக்குப் போய், பயந்து கொண்டிருந்த திருமதி சாவியிடம் ஆறுதல் சொல்லி விட்டுப்போன 276

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/294&oldid=824758" இலிருந்து மீள்விக்கப்பட்டது