பக்கம்:சாவி-85.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் அந்த உயர்ந்த நட்புக்கு இலக்கணம்தான் கலைஞர். சாவி இன்றளவும் போற்றிக் கொண்டிருப்பது அந்த நட்பு பற்றித்தான். பதினெட்டு வருடங்கள், பல்வேறு சோதனைகளுக்கு இடையே சாவி வார இதழைத் தொடர்ந்து சிறப்பாக நடத்திக் கொண்டு வந்தார் சாவி. நஷ்டம் காரணமாக நடத்த முடியாமல் போனது ஒருபுறம்; அவ்வப்போது ஏற்பட்டு வந்த சில அலுவலகப் பிரச்னைகள் ஒருபுறம். இப்படி எல்லாமாகச் சேர்ந்து போதுமே; பத்திரிகையை நிறுத்தி விடலாம் என்கிற முடிவுக்கு வந்து விட்டார் சாவி. அப்புறம் வெகு விரைவிலேயே சாவி' இதழை நிறுத்தியும் விட்டார். 'என்னிடம் ஊக்கமுடன் உழைத்தவர்கள் திடீரென வேலை இல்லாமல் நிற்பது கண்டு எனக்கு வருத்தம்தான். ஆனால் சில நாட்களிலேயே அவர்களுக்கு வேறு வேலை கிடைத்துவிட்டது. குறிப்பாக ரவி பிரகாஷ் ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவிலும், மதிக்குமார் (கார்ட்டுரிைஸ்ட் மதி) தினமணியிலும் சேர்ந்து இன்று நல்ல நிலையில் இருப்பதைப் பார்க்க மிகவும் சந்தோஷமாக இருக்கிறது' என்கிறார் சாவி. 'சாவி என்ற பத்திரிகையின் பெயர் உரிமை மட்டும் இவரிடமே இருந்து வந்தது. க்வான்டாஸ் நிறுவன அதிபர் திருவேங்கடமும் அவருடைய பார்ட்னர் திரு. முத்து கிருஷ்ணனும் ஒரு நாள் சாவி அவர்களைச் சந்தித்து 'நீங்களே ஆசிரியராகப் பொறுப்பேற்று நடத்துவதாக இருந்தால் நாங்கள் சாவி இதழ் உரிமையை விலைக்கு வாங்கிக் கொள்ள விரும்புகிறோம்" என்றார்கள். ' சாவி என்கிற பெயரை வைத்துக் கொண்டு இனி நான் என்ன செய்யப் போகிறேன்? எனக்கும் வேலை இல்லாமல் 277

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/295&oldid=824759" இலிருந்து மீள்விக்கப்பட்டது