பக்கம்:சாவி-85.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 சும்மா உட்கார்ந்திருக்க முடியவில்லை. ஆகவே நீங்களே எடுத்து நடத்துங்கள்' என்றார் சாவி. 'சாவி பத்திரிகை உரிமையை வேறு ஒருவருக்குக் கொடுத்து விட்டேன்' என்று சாவி கலைஞர் அவர்களிடம் போய்ச் சொன்ன போது கலைஞர் சாவியை வன்மையாகக் கண்டித்து, அந்தப் பெயரை நீங்கள் விலைக்குக் கொடுத்திருக்கக் கூடாது. ரொம்பப் பெரிய தவறு செய்து விட்டீர்கள் என்று கோபித்துக் கொண்டார். இரண்டாம் தடவையாக சாவி இதழின் ஆசிரியர் பொறுப்பை ஏற்றுக் கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தபோது ஒருநாள் அவர் என்னிடம் சொன்னார்: "ராணி (என்னை அவர் அழைப்பது அப்படித்தான்) ஐ திங்க் ஐ ஹேவ் ஹேட் எ லாங் இன்னிங்ஸ். ரிடையர் ஆயிடலாம்னு பார்க்கிறேன்." வயதுக்கு மீறிய உழைப்பு அவருடையது என்பதை நான் அறிந்திருந்ததால் "இதைத் தாங்கள் முன்பே செய்திருக்க வேண்டும்" என்றேன். 278

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/296&oldid=824760" இலிருந்து மீள்விக்கப்பட்டது