பக்கம்:சாவி-85.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் யாருமில்லை. எழுத்தாளர்களை ஸ்டார் மாதிரி ஆகச் செய்தவர் அவர். சில சமயம் தகுதிக்கு அதிகமாகவே அவர்களைத் தூக்கி விடுகிறாரோ என்று கூடத் தோன்றும். எழுத்தாளர்களுக்கு அவர் அளிக்கும் சிறப்பே தனி, சாவி அவர்களால் எனக்கு நிறைய நண்பர்கள் கிடைத்ததையும் நான் இங்கு சொல்லியாக வேண்டும். அவருக்கு ஏராளமான நண்பர்கள். அவர்கள் அனைவரையும் தமது எல்லா நண்பர்களுக்கும் அவரால் அறிமுகப்படுத்திக் கொண்டிருக்க முடியாதுதான். சிலர் விடுபட்டுப் போக வாய்ப்புண்டு. அப்படி விடுபடாதவர்களில் நானும் ஒருவன்.' 'சாவி. இந்த இரண்டு எழுத்துக்களை வைத்துக் கொண்டு எத்த்னை உலகங்களைத் திறந்து காட்டியிருக்கிறார் இந்த மனிதர்' என்று வியக்கும் கல்கி ஆத்மா அவர்கள் (திரு. சதாசிவம் அவர்களால் 'என் ஆத்மா என்று பெருமையோடு அழைக்கப்பட்டவர்) 'வாழ்க்கையில் அவர் பட்ட துன்பங்கள் ஏராளம். ஆனால் அவற்றை ஒருபோதும் தன்னைச் சுற்றியிருப்பவர்கள் மேல் அவர் சுமத்தியதில்லை. வேதனைகளை மெளனமாகத் தாங்கிக் கொண்டு பிறரை ஊக்குவிக்கும் பணியைப் புன்முறுவலோடு செய்பவர் அவர்' என்கிறார். சாவி மணிவிழா மலரில் எழுத்தாளர் சுஜாதா எழுதியிருப்பதைப் பார்ப்போம். 'என் போன்ற பல எழுத்தாளர்களுக்கு அவர் மிகுந்த ஆதரவு தந்திருக்கிறார். தன் பத்திரிகையில் தானே ஆதியோடந்த மாக வியாபிக்க மாட்டார். தானே ஒரு சிறந்த எழுத்தாளராக இருந்தும் மற்றவர்களுக்கு அபார சலுகைகளும் சுதந்திரமும் தந்து அவர்களை ஊக்குவிப்பதில் அவர் மிகவும் தனிப்பட்டவர்.” கவிஞர் நிர்மலா சுரேஷின் அனுபவம் எப்படி? 'கடந்த ஆண்டில் நான் அரபுக் கவிதைகளைத் தமிழில் 281

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/299&oldid=824763" இலிருந்து மீள்விக்கப்பட்டது