பக்கம்:சாவி-85.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 அப்போது 'சுதேசமித்திரன் பத்திரிகை மட்டுமே அந்தக் கிராமத்துக்கு வந்து கொண்டிருந்தது. கொஞ்சம் பணம் புரட்டி ஒரு வாசகசாலை ஆரம்பித்தால் என்ன? என்று விசுவநாதன் மனதில் ஒர் எண்ணம் பளிச்சிட்டது. உடனே, பள்ளித் தோழன் கிருஷ்ணமூர்த்தி அவன் நினைவுக்கு வந்தான். - பொருளாதார நிலையில் விசுவநாதனின் குடும்பத்தைவிட எந்த வகையிலும் ஏற்றமில்லாத குடும்பத்தில்தான் கிருஷ்ண மூர்த்தியும் பிறந்தான். இரண்டு பேரும் நெருங்கிய நண்பர்கள். அக்ரகார ஏழைகளின் நட்பு உறுதியாக இருந்தது. ஆனால் கிருஷ்ணமூர்த்திக்கு திடீரென்று ஒர் அதிர்ஷ்டம் அடித்தது. மாடி வீட்டு அய்யாவு ஐயர் அவனைத் தத்து எடுத்துக் கொண்டார். அதனால் ஒரே இரவில் கிருஷ்ணமூர்த்தி அந்தஸ்தில் உயர்ந்து போனான். "லைப்ரரி தொடங்க கிருஷ்ணமூர்த்தியிடம் போய் நன் கொடை கேட்டால் என்ன?" என்று விசுவநாதனுக்குத் தோன்ற, கிருஷ்ணமூர்த்தியிடம் போனான். விவரம் சொன்னான். "நான் இப்பதானேடா இந்த வீட்டுக்கு வந்திருக்கேன். இன்னும் பணம் எடுத்துச் செலவு செய்கிற அளவுக்கு அதிகாரம் என் கைக்கு வரலையே! இருந்தாலும் நீ மத்தியானம் வா...' என்று சொல்லி அனுப்பினான். மத்தியானம் போனபோது மூன்று ரூபாய் எடுத்துக் கொடுத்தான். உடனே, வாழைப்பந்தல் சென்று (அது கொஞ்சம் பெரிய கிராமம்) அங்கே கிடைத்த சில புத்தகங்களை வாங்கி வந்து காலியாகயிருந்த ஒரு வீட்டுத் திண்ணையைச் சார்ந்த அறையில் புத்தகங்களை அடுக்கி வைத்து வாசல் விட்டத்தில் சாக்பீஸால் 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/30&oldid=824765" இலிருந்து மீள்விக்கப்பட்டது