பக்கம்:சாவி-85.pdf/300

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 மொழி பெயர்த்தபோதுதான் முதன்முதலாக சாவி அலுவலகம் சென்று அவரைச் சந்தித்தேன். பொதுவாக எந்தப் பத்திரிகை அலுவலகத்துக்கும் நான் சென்றதில்லை. அன்று அவர் அமெரிக்காவுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தார்.அந்த அவசரத்திலும் ஐந்து நிமிடம் ஒதுக்கி என்னோடு பேசினார். கன்னியாகுமரியில் வள்ளுவர் சிலை திறப்பு விழாவுக்காக, சிறப்பு ரயிலில் நூற்றுக்கணக்கானவர்கள் சென்றோம். அப்போது சாவி அவர்களிடம் நான் எழுதிய அரபுக் கவிதைக்கு ஆரத்தி: என்ற புத்தகத்தைத் தந்தேன். உடனே திறந்து படிக்க ஆரம் பித்தவர் அவ்வப்போது என்னைப் பாராட்டிக்கொண்டே ஐம்பது பக்கங்களுக்கு மேல் படித்து விட்டார். அனுபவம் மிகுந்த, அந்த எழுத்து ஞானியின் பாராட்டு ஒருபுறமிருக்க, என் வாழ்க்கையில் புத்தகம் கையில் கிடைத்த உடன் பிரித்துப் படிக்கிற ஆர்வத்தை சாவி அவர்களுக்கு முன்னால் ஒரே ஒருவரிடம்தான் கண்டிருக்கிறேன். அவர்தான் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள். படித்து முடித்ததும் திரு. சாவி அருகில் இருந்த கவிஞர் தமிழன்பனிடம், "இந்தப் புத்தகத்தைப் படித்தீர்களா? மொழி பெயர்ப்பு என்றே சொல்ல முடியாது. ரொம்ப சரளம்" என்றார் தேர்ந்த ரசனையுடன். மனம் திறந்து உண்மையை எடுத்துரைக்கும் இந்த நல்ல பண்பை இலக்கிய உலகில் காண்பது அரிது" என்கிறார் கவிஞர் நிர்மலா சுரேஷ். இன்று தமிழகத்தின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவரான பாலகுமாரன் அவர்களும் சாவியின் மோதிரக் கையால் குட்டுப்பட்டவரே. 'என் வாழ்க்கையில் ஒரு காலகட்டத்தில் சில வருடங்கள் அவருக்குப் பிரியமானவராய் நெருங்கி அவரைச் சுற்றி வலம் வந்திருக்கிறேன். சாவிக்கு அருகே இருப்பவர்களுக்கு எப்போது நல்ல வாய்ப்பு கொடுக்கப்படும் என்று சொல்ல 282

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/300&oldid=824766" இலிருந்து மீள்விக்கப்பட்டது