பக்கம்:சாவி-85.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் எப்படிக் கண்டு பிடித்தார்? குமுதம் என்று எழுதியிருந்த முதல் பக்கத்தைக் கிழித்துவிட்டு வேறு தாளில் சாவி என்று எழுதித்தானே கொடுத்திருந்தேன்! 'சொல்லுங்க ஸார் என்றார் சாவி. ஆமாம் ஸார் ஒப்புக் கொண்டேன். நான் உண்மையைச் சொல்லி விட்டதால் சாவி சட்டென்று கோபம் தணிந்தார். 'இதோ பாருங்க ராஜேஷ் குமார் நான் சொல்றதை நல்லா மனசில வாங்கிக்குங்க. யாருக்குமே 'ஸெகண்ட் ஹாண்ட்’னா கொஞ்சம் இளப்பம்தான். இனிமே ஒரு பத்திரிகையிலிருந்து திரும்பி வந்த கதைகளை இன்னொரு பத்திரிகைக்கு அனுப்பும்போது சுத்தமான பேப்பர்ல வேற புதுசா ஒரு பிரதி எடுத்து அனுப்பறது உத்தமம். ஒரு பத்திரிகையில இருந்து திரும்பி வந்த கதையைச் சுலபமா அடையாளம் கண்டுபிடிக்க முடியும். பேப்பர்களோட முனைகள் சுருண்டு, அழுக்காகி, முன்னே குத்தப்பட்ட குண்டுசி ஒட்டைகளோடு அதன் கற்பு பறிபோன விஷயம் தெரிஞ்சு போயிடும். இந்தக் கதைகளைக் கொடுத்துட்டுப் போங்க. நான் படிச்சுப் பார்க்கிறேன். கதை நல்லாயிருந்தா அச்சில் ஏறும். இல்லேன்னா போஸ்ட்மேன் மூலமா உங்க வீட்டுப் படியேறும் எனறாா. - இப்போதும்கூட எந்த ஆரம்ப எழுத்தாளராவது என்னிடம் யோசனை கேட்கும்போது நான் இந்தச் சம்பவத்தைச் சொல்லாமல் இருப்பதில்லை. இதுவரை நூறு தடவை சொல்லியாயிற்று. அலுக்கவே இல்லை." பட்டுக் கத்தரித்த மாதிரி எழுதும் பட்டுக்கோட்டை பிரபாகர் சொல்கிறார்: 'அப்போது அவர் குங்குமத்தில் ஆசிரியர். ஐந்து 285

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/303&oldid=824769" இலிருந்து மீள்விக்கப்பட்டது