பக்கம்:சாவி-85.pdf/304

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 சிறுகதைகள் மட்டும் வெளியாகியுள்ள எழுத்தாளன் நான். (அதில் இரண்டு குங்குமத்தில்) நன்றி நவில எலுமிச்சைப் பழத்துடன் அவர் அலுவலகத்தில் நான். அறைக்குள் அவர் கவர்ச்சியான அறைக் கதவுகள் அவரின் வேட்டி கட்டிய கால்களைக் காட்டுகின்றன. உள்ளே போய் தகவல் சொல்லி வெளிவந்த நபர் என்னிடம், 'உங்க கதைகள் நல்லா இருந்ததால போட்டோம். இதுல நன்றி சொல்ல எதுவுமில்லை. தொடர்ந்து எழுதச் சொன்னாரு. அவரைப் பார்க்கணும்னு அவசியமில்லைன்னு சொல்லச் சொன்னாரு என்றதும் எனக்கு ஏகமாய் ஏமாற்றம். அதன் பிறகு அவர் தனியாக 'சாவி இதழ் ஆரம்பித்த பிறகுதான் முதல் சந்திப்பு நிகழ்ந்தது. அப்போது இந்தச் சம்பவத்தைச் சொன்னேன். அப்படியா!' என்று சிரித்தார். நான் எழுதிய இரண்டாவது சிறுகதைக்கே சாவி சாரிடமிருந்து கடிதம் வந்ததில் பிரமித்துப் போனேன். 'பிரபாகர், உங்கள் எழுத்தில் ஒரு பொறி இருக்கிறது. நிறைய எழுதுங்கள். முன்னுக்கு வர முடியும். வாழ்த்துக்கள் என்று கைப்பட அவர் எழுதின அந்த முதல் கடிதத்திலிருந்து அதன் பிறகு இன்று வரை அவர் எழுதின பல கடிதங்களையும் பத்திரமாக வைத்திருக்கிறேன். அந்தக் கடிதங்களில் ஒரு தந்தையின் பாசம் இருக்கும். ஊக்குவிப்பு இருக்கும். சுறுசுறுப்பூட்டும் டானிக் கலந்திருக்கும். தனது எழுத்துலக பிரவேசத்துக்கு மிகச் சிறந்த பாதை போட்டுக் கொடுத்தவர் சாவி என்பதை நன்றியோடு குறிப்பிடுகிறார் அனுராதா ரமணன். "எழுத ஆரம்பித்த புதுசு. சாவி அவர்கள் அப்போது குங்குமத்தில் ஆசிரியராக இருந்தார். நான் மேட்டுரில் இருந்தேன். தொடர்ந்து நாலைந்து சிறுகதைகள் பிரசுரமாகி 286

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/304&oldid=824770" இலிருந்து மீள்விக்கப்பட்டது