பக்கம்:சாவி-85.pdf/305

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் இருந்தன. வெளிப் பத்திரிகைகளில்தான். குங்குமத்துக்கு 'பிரண்ட்ஷிப் என்கிற தலைப்பில் சற்றே பெரிய கதை ஒன்றைத் தபால் வழியாக அனுப்பி வைத்தேன். கிட்டத்தட்ட நாலைந்து மாதங்கள் கிணற்றில் போட்ட கல்லாக கதை இருக்க, சாவி அவர்களுக்கு இதுபற்றி விசாரித்து ஒரு கடிதம் எழுதினேன். உடனடியாக அவரிடமிருந்து பதில் வந்தது. அவர் கைப்பட நறுக்குத் தெறித்தாற்போல் சிறிய கடிதம்தான். உங்களது கதை படித்தேன். மிகச்சிறந்த எழுத்தாளரில் ஒருவராக எதிர்காலத்தில் நீங்கள் திகழப் போகிறீர்கள். இது என் கணிப்பு. கூடிய விரைவில் குங்குமம் இதழில் கதை வெளிவரும். என் வாழ்த்துக்கள்." இவ்வளவுதான் கடிதத்தின் விஷயம். ஆனால் அந்த வரிகள் என்னை இமயமலை உச்சிக்குக் கொண்டு போய் உட்கார வைத்தது. மறுபடி மறுபடி அந்தக் கடிதத்தைப் படித்துப் பார்ப்பேன். வீட்டுக்கு யார் வந்தாலும் அது பற்றிப் பேசாமல் இருக்க மாட்டேன். குழந்தை போல் ஒடிச்சென்று அந்தக் கடிதத்தை எடுத்து வந்து படித்துக் காட்டுவேன். 'வசிஷ்டர் வாயால் பிரும்மரிஷி” 'சாவி வாயால் சபாஷ்' என்னளவில் இரண்டும் ஒன்றுதான். இதுதான் ஆரம்பம். இதற்குப்பின் எத்தனையோ முறை கடிதப் போக்குவரத்து, நேரில் சந்திப்பு. அப்படிச் சந்திக்கும்போதெல்லாம் சொல்ல முடியாத உற்சாகம் நம்மை தொற்றிக் கொள்ளும். கதையை விமரிசிப்பதில் அவருக்கு நிகர் அவர்தான். அவருக்குப் பிடித்த மாதிரி இல்லாவிட்டால் நறுக்கென சொல்லியும் விடுவார். அதற்காக வருத்தப்படக் கூடாது. ஆனால் ரோசப்பட வேண்டும். மறுபடியும், மறுபடியும் அவர் வாயால் சபாஷ் வாங்கும்போது அன்றுதான் முதல் கதை எழுதிய எழுத்தாளர் போல் உணர்வேன். 287

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/305&oldid=824771" இலிருந்து மீள்விக்கப்பட்டது