பக்கம்:சாவி-85.pdf/306

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 எழுத்தானாலும், சாப்பாடானாலும், சங்கீதமானாலும் அதை பாராட்டி விமர்சிக்க அங்கே ஒரு சாவி வேண்டும். அப்பொழுதுதான் அங்கே களை கட்டும். இன்னமும் கூட எந்தப் பத்திரிகையில் நான் எழுதினாலும், 'இந்த எழுத்தை சாவி சார் படிச்சா என்ன சொல்லுவார் என்று நினைத்துப் பார்ப்பேன். எனக்குத் தெரியும். எந்தப் பத்திரிகையில் நான் எழுதினாலும் அவர் படிப்பார். உடனேயே விமரிசிக்க முடியாவிட்டாலும், பக்கத்தில் இருப்பவர்களிடம் படிக்கச் சொல்லிக் கொடுப்பார். அது கள்ளம் கபடமே இல்லாத ரசிக மனம். அந்த மனம் இருக்கும் வரை எங்களைப் போன்ற எழுத்தாளர்களும் சிறப்பாக மதிக்கப் படுவோம்." இசை நடனம், பயணங்கள், கதை என்று பல துறைகளிலும் கால் பதித்து புகழ் ஏணியில் ஏறி வரும் ஸுஜாதா விஜயராகவன் அவர்களைப் பல வகையிலும் ஊக்கம் தந்து உற்சாகப்படுத்தியவர் சாவி, “எனது அரங்கம் நாவலை முதல் எழுபது பக்கங்கள்போல் ஒரே மூச்சில் எழுதி முடித்த பின் என் மனதில் ஒரு சோர்வு. முழுக்க முழுக்க கர்நாடக இசை பற்றிய இந்த நாவலை யார் பிரசுரிக்கப் போகிறார்கள் என்ற சந்தேகம். அவ்வளவுதான். அப்படியே உள்ளே வைத்து விட்டேன். ஒரு வருடத்துக்குப் பிறகு, முதல் நான்கு அத்தியாயங்களை சாவி அவர்களுக்கு அனுப்பி வைத்தேன். 'படித்துப் பாருங்கள். பிரசுரத்துக்கு ஏற்றதாக இருக்கிறது என்று தோன்றினால் மேற் கொண்டு எழுதுகிறேன் என்றேன். 'உங்கள் எழுத்தில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. உங்களுக்கும் உங்கள் எழுத்தைப் பற்றிய பொறுப்புணர்வு இருக்குமல்லவா? அது போதும் என்று முடித்து விட்டார். 288 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/306&oldid=824772" இலிருந்து மீள்விக்கப்பட்டது