பக்கம்:சாவி-85.pdf/308

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 போது நடந்தவை வீடியோ படம் போல நமக்குப் பளிச்சிடும். என்பார். பயணக் கட்டுரைகளில் இது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது" என்று முடிக்கிறார் மெரீனா. ராணிமைந்தன் என்கிற என்னை சாவி அவர்கள் எப்படி யெல்லாம் ஒரு பத்திரிகையாளனாக உருவாக்கினார் என்பதை நினைக்கும்போது எனக்கே இப்போது வியப்பாக இருக்கிறது. பத்திரிகையின் ஒவ்வொரு அம்சத்தையும் தமக்கே உரிய பாணியில் அவர் எனக்கு உணர வைத்தார். ஒருமுறை குங்குமம்' இதழுக்காக தினந்தோறும் சென்னை நகரில் நடக்கும் பல்வேறு கூட்டங்களுக்குப் போக வேண்டும். பேசுகிறவர்களில் யாராவது சுவையாக ஏதேனும் சொன்னால் அதைக் குறிப்பெடுத்துக் கொண்டு வந்து நாலு வரி 'பளிச்சென்று தர வேண்டும். இது மாதிரி ஒவ்வொரு வாரமும் ஏழு அல்லது எட்டு செய்திகள் தேவை என்றார் சாவி. 'பெரிய அரசியல் கூட்டங்களுக்குப் போக வேண்டாம். அவை பற்றித்தான் மறுநாள் பேப்பரில் வந்து விடுமே என்று அட்வைஸ் வேறு செய்திருந்தார். ஹிண்டு நாளிதழில் டுடேஸ் எங்கேஜ்மென்ட்ஸ்” பகுதியிலிருந்து நகரில் நடக்கும் சின்னச் சின்னக் கூட்டங்கள் பற்றித் தெரிந்து கொள்வேன். தினமும் ஒரு கூட்டத்துக்குப் போய் உட்கார்ந்திருப்பேன். சில நாட்கள் என் துரதிர்ஷ்டம் ஒரு மேட்டரும் தேறாது. மவுண்ட் ரோடு எல்.எல்.ஏ. கட்டிடம், ராயபுரம், மண்ணடி, அசோக் நகரில் ஒரு வீட்டு மாடி, மயிலாப்பூரில் ஏதாவது ஒரு சந்து என்று மாலை வேளைகளில் சென்னையில் எங்கு வேண்டுமானாலும் நான் இருப்பேன். மேட்டர் கிடைக்க வில்லை என்று ஸாரிடம் சொல்ல முடியாது. அப்புறம் நீ என்ன ஜர்னலிஸ்ட்?" என்று கேட்டு விடுவார். ஒரு நாளைக்கு இரண்டு மூன்று கூட்டங்கள் கூடப் 290

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/308&oldid=824774" இலிருந்து மீள்விக்கப்பட்டது