பக்கம்:சாவி-85.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் போனதுண்டு. அலைச்சல் என்றால் அப்படியொரு அலைச்சல். 'இப்படி உடம்பை வருத்திக் கொண்டு எழுதித்தான் ஆக வேண்டுமா? என்று கூடச் சலிப்பு தோன்றும் கொடுத்திருக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு நம்மை நிரூபித்து ஸாரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்ற உறுதி அந்தச் சலிப்பைப் போக்கிவிடும். கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் 'மாலை வேளை, மைக் போன்ற தலைப்புகளில் நான் அப்பகுதியை எழுதி வந்தேன். அந்தப் பயிற்சியால்தான், ஒருவரிடம் ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தாலும் எழுதுவதற்கு எதை மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தெரிந்து கொண்டேன். துணுக்கு எழுது என்பார்; நாடக விமரிசனம் எழுதச் சொல்வார்; இன்று இந்த சினிமாவைப் பார்த்து விட்டு நாளை காலை பட விமரிசனம் என் மேசை மீது இருக்க வேண்டும்' என்பார். பேட்டிக் கட்டுரைகள் எழுதும்போது எதை எதை விட்டுவிட வேண்டும் என்று சொல்லிக் கொடுப்பார். 'உன் மேட்டரை நான் எடிட் செய்தபின் நீ ஒரு தரம் படித்துப் பார். புரியும்' என்பார். கட்டுரைகளுக்கு புகைப்படங்கள் எவ்வளவு அவசியம் என்பதைப் பல உதாரணங்கள் மூலம் வலியுறுத்துவார். சில சமயங்களில் எதுவும் பேசாமல் அவர் செய்யும் லே அவுட்களை அருகிலிருந்து கவனித்தாலே போதும். பல நுணுக்கங்கள் தாமாகவே புரியும். இப்படி படிப்படியாக அவர் கற்றுத் தந்த அம்சங்கள் கணக்கிலடங்காதவை. துணுக்கிலிருந்து தலையங்கம் வரை அவர் எனக்குத் தந்த வாய்ப்புகளைத் திரும்பிப் பார்க்கையில் அடேயப்பா!' என்று வியப்பாக இருக்கிறது. சாவிதான் எனக்கு 'சாந்தி நிகேதன் என்று சொல்லிக் கொள்வதில் எவ்வளவு பெருமை!’ - 291

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/309&oldid=824775" இலிருந்து மீள்விக்கப்பட்டது