பக்கம்:சாவி-85.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் 'நாமகள் வாசக சாலை' என்று எழுதி வைத்தான். பகத்சிங் பெயர்தான் வைக்க வேண்டும் என்பது விசுவநாதனின் ஆசை ஆனால் நன்கொடை தந்தவனின் ஆசை நாமகள் வாசக சாலை. தட்ட முடியாதே! எழுத்து வாசனை அறியாத கிராம மக்களுக்கு லைப்ரரி ஏன்? யாருமே வாசகசாலைப் பக்கம் கூட எட்டிப் பார்க்க வில்லை. இருந்தாலும் வாங்கிய புத்தகங்களைத் தானே படித்துப் படித்துச் சரளமாகப் படிக்கப் பழகிக் கொண்டான் விசுவநாதன். தெருக்கூத்து பார்ப்பது என்பது விசுவநாதனுக்கு அல்வா சாப்பிடுவது போல. அதற்குத் தடையாக எது வந்தாலும் அதைத் தகர்த்தெறிய அவன் தயங்கியதில்லை. அக்கம் பக்கம் கிராமங்களில் எங்கே கூத்து என்றாலும் அங்கே விசுவநாதன் ஆஜர் புரிசை நடேசனார் கூத்து அந்தக் காலத்தில் பிரபலம். இரவு நேரங்களில் வீட்டில் தங்காமல் ஊர் ஊராகப் போனால் அப்பா அடிப்பார்தான். அதற்காகக் கூத்து பார்க்காமல் இருக்க (ԼpւգԱվւDո? இந்த இடத்தில் குண்டு ஐயர் என்பவர் பற்றிச் சொல்ல வேண்டும். அவரது கதை ஒரு சோகக் கதை. பாலாமணி டிராமா கம்பெனியில் குண்டு ஐயர் (காரணப் பெயர்தான்) பஃபூன் வேடம் பூண்டு கலக்குவார். நன்றாக முன்னுக்கு வந்து கொண்டிருந்தவர்தான். சில ஆண்டுகளுக்குள்ளாகவே, அவரது போதாத காலம், நாடகக் கம்பெனி திவாலாகி அவரும் பாப்பராகி அனாதையாக வயதான காலத்தில் சொந்த கிராமத்துக்கே வந்து சேர்ந்து விட்டார். ஒண்டிக் கட்டை. கழுத்திலே ருத்திராட்சக் கொட்டை. வாழ்க்கையில் நொந்து போய்விட்டாலும் அவர் ஒரு 21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/31&oldid=824776" இலிருந்து மீள்விக்கப்பட்டது