பக்கம்:சாவி-85.pdf/310

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46. பத்திரிகை அவர் மூச்சு சென்னை உயர்நீதி மன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களில் ஒருவரும், நாரத கான சபா செயலாளருமான ஆர்.கிருஷ்ணசாமி அவர்கள் என்னையும் ஒரு எழுத்தாளனாக ஆக்கிய பெருமை சாவிக்குத்தான் என்கிறார். 'சாவி’ என்ற இந்த இரண்டெழுத்துகளில் ஒரு சகாப்தமே அடங்கியுள்ளது. சாவியை சுமார் பதினைந்து ஆண்டுகளாக நெருக்கமாக அறிவேன். சாவியைப் பொறுத்தவரை அவர் ஒரு குழந்தை மனது படைத்தவர். அவர் உள்ளத்தில் வன்மம் கிடையாது. காழ்ப்புணர்ச்சியைக் காண முடியாது. அவரது கோபமும் ஒரு குழந்தைக்குண்டான கோபம்தான். ஒரு உயர்ந்த மனிதர். நட்பென்றால் அதற்காக எதையும் செய்யத் துணிந்தவர். ஆனால் நேர் வழியில்தான். வெளிப்படையாகப் பேசும் குணம் உள்ளவர். "ஒரு சமயம் வழக்கின் தன்மைகளைப் பற்றி எங்களிடையே விவாதம் ஏற்பட்டது. அப்போது சாவி கூறினார்: 'இன்றைய நாட்களில் தீர்ப்புகள் யாவும் விலை கொடுத்து வாங்கப்படுவதாகக் கூறுகிறார்கள். ஆகவே உங்களைப் போன்ற வழக்கறிஞர்களுக்கு என்ன வேலை உள்ளது? வழக்காடுவதே வியாபாரமாகப் போகிறது. உண்மையில் அவர் யாரையும் குறை கூற விரும்பவில்லை. பத்திரிகைகளில் வரும் செய்திகளைப் 292

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/310&oldid=824777" இலிருந்து மீள்விக்கப்பட்டது