பக்கம்:சாவி-85.pdf/311

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் படித்து விட்டும், சமுதாயத்தில் பேசப்படும் செய்திகளைக் கேள்விப்பட்டுமே இவ்வாறு அவர் கூறினார். சாவி சார் மேலெழுந்தவாரியாகப் பார்த்தால், உங்களைப் போல் எண்ணம் கொண்டவர்கள் பலர் உள்: ஆனால் அது உண்மையல்ல. நீதிபதி தம்முடைய நீதிமன்றத்தில், இறைவனின் பிரதிநிதியாகத்தான் இருக்கிறாரே தவிர அவர் தமது சொந்த விருப்பு வெறுப்புகளுக்குட்பட்டு தீர்ப்புக் கூறுவதில்லை. பல நேரங்களில் தீர்ப்புகள் சட்டத்தின் அடிப்படையில் இல்லாமல் நியாயத்தின் அடிப்படையில் அமைவதும் உண்டு. இதற்கெல்லாம் காரணம் மேலே ஒரு நீதிபதி: இருக்கிறார் என்றேன். எடுத்துக்காட்டாக ஒரிரு வழக்குகளைப் பற்றி நான் விவரித்தேன். அதையெல்லாம் சுவாரசியமாகக் கேட்டுக் கொண்டிருந்தவர் “நீங்களே ஏன் இம்மாதிரி வழக்குகளைக் கொண்டு சாவி இதழில் கட்டுரைகள் எழுதக்கூடாது? அவற்றைப் படித்தால் நீதிமன்றங்களின் மேல் மக்களுக்கு உயர்வான எண்ணம் ஏற்படுமே!” என்றார். இதைப் போல் ஆன்மீகத்திலும் அவரது கருத்து மாறுபட்டதாக இருந்தபோது, நான் எடுத்துக் சொன்ன சில கருத்துக்களை ஏற்று தமது பத்திரிகையில் ஆன்மீக மணம் iசச் செய்தார்." தினமணி நாளிதழில் கார்ட்டுனிஸ்டாகப் புகழ் பெற்று விளங்கும் மதி அவர்கள் 'சாவியின் நர்சரிப் பள்ளியில் பயின்றவர்களில் நானும் ஒருவன்' என்று பெருமைப்பட்டுக் கொள்கிறார். "பொதுவாகவே அவருக்கு கார்ட்டுனிஸ்ட்டுகள் மீது பிரியம் அதிகம். ஒரு கார்ட்டுனுக்குத் தேவையான நுணுக்கங்கள் அத்தனையும் அவருக்கு அத்துபடி ஐடியாவுக்குத் தகுந்தவாறு லைன்ஸ் இருக்க வேண்டும் என்பார். சில கார்ட்டுன்களுக்கு லைன்ஸ் தடிமனாக இருக்க வேண்டும். சில கார்ட்டுன்களுக்கு 293

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/311&oldid=824778" இலிருந்து மீள்விக்கப்பட்டது