பக்கம்:சாவி-85.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 லைன்ஸ் மெலிதாக இருக்க வேண்டும். கோடுகள் மெலிதாக இருக்க வேண்டும் என்பதை "ஒமப்பொடி லைன்ஸ் என்பார். கார்ட்டுன் லைன்ஸில் எப்பொழுதும் ஒரு natural flow இருக்க வேண்டும் என்பார். முதலில் அவரது ஒப்புதலுக்காக எனக்குத் தோன்றும் கார்ட்டுன் ஐடியாவை ஒரு rough papergi Guangă, காட்டுவேன். பலமுறை அந்த rough copyயையே பத்திரிகைக்கு பயன்படுத்திக் கொள்கிறேன் என்று வாங்கி வைத்துக் கொள்வார். இதை நீங்கள் fair செய்தால் தற்போது இருக்கும் இயல்பான அழகைக் கெடுத்து விடுவீர்கள் என்று fair செய்வதையே தடுத்து விடுவார். அந்த அளவுக்கு நுணுக்கங்கள் தெரிந்தவர். கார்ட்டுனிஸ்ட்டுகள் பிரஷ்ஷைத் தவிர வேறு எதையும் பயன் படுத்தக் கூடாது என்பது அவருடைய கருத்து. அதை இன்றளவும் நான் கடைப்பிடித்து வருகிறேன். ஒரு செய்தியை எவ்வாறு display செய்ய வேண்டும் என்பதில் அவருக்கு நிகர் அவரேதான். அவருடைய layout sense அற்புதமானது. லே-அவுட்தான் ஒரு பத்திரிகைக்கு உயிர் என்பார். அந்த அளவுக்கு அதற்கு முக்கியத்துவம் கொடுப்பார். ஒவ்வொரு பக்கமும் ஒவ்வொரு அழகு. லே-அவுட் என்பது ஒரு பத்திரிகைக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில் வெளிவந்த முதல் தமிழ்ப் பத்திரிகை சாவிதான். இன்றும் அந்த அளவு லே - அவுட் திறனை வேறு எந்தப் பத்திரிகையிலும் என்னால் காண முடியவில்லை." சாவி கற்றுக் கொடுத்ததையெல்லாம் வேதவாக்காக ஏற்று இன்று ஆனந்த விகடன் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றிருக்கும் நண்பர் ரவி பிரகாஷ் சாவியிடம் பயிற்சி பெற்ற மாணவர்களில் ஒருவர். சாவி இதழில் தான் பணிபுரிந்த காலகட்டங்களில் தனக்கு ஏற்பட்ட ஒவ்வொரு அனுபவமும் எப்படி ஒரு பாடமாக அமைந்தது என்பதையும், பத்திரிகைத் தொழிலை அவர் எப்படி ஒரு தவமாக மேற்கொண்டிருந்தார் என்பதையும் ரவி பிரகாஷ் 294

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/312&oldid=824779" இலிருந்து மீள்விக்கப்பட்டது