பக்கம்:சாவி-85.pdf/313

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் நம்மிடம் பகிர்ந்து கொள்ளும்போது சாவி என்கிற பத்திரிகை ஆசிரியரின் பல்வேறு பரிமாணங்கள் நமக்குப் புரிந்து போகிறது. அவரது கடமையுணர்வு, ஊன் உறக்கம் பாராத உழைப்பு, கற்றுத் தரும் பண்பு, பாசம், பரிவு, மனிதாபிமானம் இத்தனைக்கும் ரவியின் அனுபவங்களே சிறந்த உதாரணங்கள் ரவி பிரகாஷ் சொல்கிறார்: "ஆசிரியர் சாவி அவர்களிடம் நான் வேலைக்குச் சேர்ந்த புதிது. ஆசிரியர் பார்ப்பதற்காக ஒரு மேட்டரின் காலி அவரது மேஜை மீது இருந்தது. ஆசிரியர் வீட்டிலேயேதான் ஆபீஸ். அவர் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். வருவதற்குச் சற்று நேரமாகும் என்ற நிலையில் நான் சும்மா இராமல் அவர் பார்ப்பதற்காக வைத்திருந்த காலி'யை எடுத்து புரூஃப் பார்த்து வைத்ததோடு அல்லாமல், தேவையில்லை என்று எனக்குத் தோன்றிய பகுதிகளை யெல்லாம் எடிட்' செய்து வைத்து விட்டேன். இதைப் பார்த்த உதவி ஆசிரியர் கண்ணன் என்பவர் எனக்கு செம டோஸ் விட்டார். இது என்ன முந்திரிக் கொட்டைத்தனம்? நீ வேலைக்குச் சேர்ந்து ஒரு மாசம் கூட ஆகலை. அதுக்குள்ளே ஆசிரியருக்கு வைத்த காலியில் புரூஃப் பார்க்கிற அளவுக்கு ஆயிட்டியா? அவர் பார்க்கிற புரூஃப் கிளினா இருந்தாத்தான் அவர் அதைப் படிப்பார். இப்படி அதில் கை வெச்சிருக்கிறியே... இப்போது இன்னொரு காலி வாங்கி வரவும் நேரமில்லையே... போச்சு... ஆசிரியருக்கு கோபம் வரப்போகுது. இன்னியோட உன் வேலை காலி என்று பயமுறுத்தினார். சாவி அவர்கள் சாப்பிட்டுவிட்டு வந்து நான் திருத்தி வைத்திருந்த காலியை எடுத்து ஒரு கிளான்ஸ் பார்த்தார். கண்ணன் சொன்னதுபோல ஆசிரியர் சாவி என் மீது கோபப்படவில்லை. மாறாக, 'வெரிகுட்! நல்லா புரூஃப் 295

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/313&oldid=824780" இலிருந்து மீள்விக்கப்பட்டது