பக்கம்:சாவி-85.pdf/314

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 பார்த்திருக்கிறான். நாளையிலிருந்து இவனையே புரூஃப் பார்க்கச் சொல்லி கரெக்ஷன் போட்டு வாங்குங்க, அப்புறமா நான் பார்க்கிறேன்" என்று கண்ணனிடம் சொல்லி விட்டார். புதுப்பையனோ, பழைய பெரியவரோ, அறிமுக எழுத்தாளரோ, பிரபல எழுத்தாளரோ... ஆசிரியர் சாவிக்கு அதெல்லாம் முக்கியம் இல்லை. செய்கிற வேலையை மட்டும்தான் பார்ப்பார். ஆசிரியர் சாவியைப் பற்றிப் பொதுவாக எல்லோருமே சொல்கிற ஒரு கருத்து அவர் மகா கோபக்காரர். அவர் என்னிடமும் பலமுறை கோபப்பட்டிருக்கிறார். ஆனால் அத்தனையும் என் மீது உள்ள அக்கறையினாலும், நான் என் பணியில் மேலும் சிறப்படைய வேண்டும் என்பதாலும்தான். நியாயமற்ற விதத்தில் அவர் யார் மீதும் கோபப்பட்டதாக என் அனுபவத்தில் கண்டதில்லை. எந்த விஷயத்தையும் எதிராளிக்குப் புரிகிற விதத்தில் எளிமையாகவும், சுவாரசியமாகவும், தமாஷான உதாரணங் களோடும் விளக்குவதில் சாவிக்கு நிகர் சாவி அவர்களே! பிரபல வாரப் பத்திரிகை ஒன்றில், அரைப்பக்க அளவுக்கு காலியாக இருந்த ஒரு இடத்தில் ஃபில்லருக்காக ஒரே ஒரு ஜோக் போடப்பட்டிருந்தது. ஜோக்குக்கான அளவு படத்துடன் சேர்த்து கொஞ்சம்தான். ஆனால் இருந்த இடமோ அரைப் பக்கம். இதனால், இடத்தை நிரப்புகிற விதமாக அந்தப் பத்திரிகையின் லே-அவுட் ஆர்ட்டிஸ்ட் ஜோக்கைச் சாய்த்து டிஸைன் செய்து, மேலும் கீழும் பிரஷ்ஷால் கோடு போட்டு ஒருமாதிரி இடத்தை நிரப்பிச் சமாளித்திருந்தார். இதை என்னிடம் காண்பித்து, இந்த ஜோக்கை எப்படிப் போட்டிருக்காங்கன்னு பார்! இது எப்படியிருக்குன்னா காலியான ரயில் பெட்டியில் ஏறிக்கிறவன் முழு பெஞ்ச்சும் காலியாய் 296

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/314&oldid=824781" இலிருந்து மீள்விக்கப்பட்டது