பக்கம்:சாவி-85.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் இருப்பதைப் பார்த்து அதையும் சேர்த்து அனுபவிக்கணும்னு காலை நீட்டிப் படுத்து அத்தனை இடத்தையும் ஆக்கிரமித்துக் கொள்வான். அந்த மாதிரி இருக்கு இந்த ஜோக்கைப் போட்டிருக்கிற விதம்! எனறாா. என் மனதில் இந்த உதாரணம் மூலம் பசுமரத்தாணியாய்ப் பதிந்து விட்டது. இதை சாவி ஒருவரால்தான் புரிய வைத்திருக்க முடியும். எந்த ஜர்னலிஸப் படிப்பும் இதைக் கற்றுத் தரமுடியாது. லே-அவுட் செய்வதென்பது சும்மா cut and paste சமாசாரம் இல்லை; அது ஒரு கலை என்பதை எனக்கு உணர்த்தியவர் அவர்தான். லேஅவுட் செய்யப்பட்ட பக்கத்தைப் பார்த்து இந்த டைப் எழுத்து சரியில்லை. slant type போட்டுப் பார். பக்கம் அழகாக அமையும் என்பார். ஆசிரியர் சொன்ன அந்த மாற்றத்தைச் செய்த பின் நிஜமாகவே அந்த வித்தியாசம் புரியும். இந்தத் தலைப்பு எழுத்தை இவ்வளவு பெரிசாக வைக்காதே. சின்னதாக இந்த மூலையில் வை. இங்கே தாராளமாக ஸ்பேஸ் கொடு' என்பார். அதைச் செய்த பின், அந்தப் பக்கத்தைப் பார்த்தால் ஆகா என்று இருக்கும். அதற்கு முன் அடைசலாக, இருந்த பக்கம் ஆசிரியர் சொன்ன மாற்றத்தைச் செய்த பின் பளிச்சென்றிருக்கும். செங்கல் சுவர் அடுக்கின மாதிரி போட்டுத் திணிக்காதே! மூச்சு வாங்கக் கொஞ்சம் இடம் கொடு. அப்பத்தான் படிக்க முடியும்' என்பார். பத்திரிகைப் பணி என்பது சாவி அவர்களின் மூச்சு . புரூஃப் திருத்த உட்கார்ந்தால் அதிலேயே வெகுவாக ஆழ்ந்து போய் விடுவார். பக்கத்தில் இடியே விழுந்தாலும் தெரியாது. நானே நேரடியாகப் பார்த்து அதிசயித்த சம்பவம் ஒன்று உண்டு. ஒருநாள் தம்முடைய அறையில் அமர்ந்து புரூஃப் பார்த்துக் கொண்டிருந்தார். அந்த அறைக்கு அட்டாச்டு பாத்ரூம் உண்டு. இடையில் ஒருமுறை எழுந்து அந்த பாத்ருமுக்குப் போய் வந்து மீண்டும் புரூஃப் திருத்தத் தொடங்கி இருக்கிறார். 297

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/315&oldid=824783" இலிருந்து மீள்விக்கப்பட்டது