பக்கம்:சாவி-85.pdf/316

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 நான் சற்று நேரம் கழித்து அவர் அறைக்குள் போனவன், திடுக்கிட்டுப் போனேன். கணுக்கால் வரை தண்ணீர். ஆசிரியரைப் பார்த்தேன். அவரது கால்களும் தண்ணீரில் மூழ்கியிருந்தன. வேட்டியின் நுனி நனைந்திருந்தது. ஆனால் அது தெரியாமல், ஆசிரியர் ரொம்ப மும்முரமாக புரூஃப் திருத்துவதில் முனைந்திருந்தார். மெதுவாகக் குரல் கொடுத்து அவரது கவனத்தைத் திருப்பினேன். சார். அறைக்குள் தண்ணீர் என்றேன். அவர் அப்போதுதான் அதையே கவனித்தவராய் அடாடா... பாத்ரூம் போனவன் வாஷ் பேஸின் குழாயை மூட மறந்துட்டேன் போலிருக்கு. போய் கொஞ்சம் நிறுத்திடேன்' என்றார். நான் குழாயை மூடிவிட்டு வெளியே வந்தபோது சாவி தன் இரு கால்களையும் தூக்கி நாற்காலியில் சப்பணமிட்டு அமர்ந்தபடி, மீண்டும் புரூஃப் திருத்துவதில் மூழ்கிப் போயிருந்தார். இவரிடம் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது எனது கொடுப்பினை அல்லாது வேறென்ன? பத்திரிகையின் கடைசி கட்ட வேலைகள் ஒவ்வொரு வார இறுதியிலும் சனிக்கிழமையன்று ராத்திரி இரண்டு அல்லது மூன்று மணிக்கு முடியும். அதுவரையிலும் விழித்திருந்து லேஅவுட் செய்த பக்கங்களைப் பார்த்த பிறகே படுக்கச் செல்வார் ஆசிரியர். விடியற்காலை மூன்று மணி அளவில் ஃபாரம் வேலை முடியும். எழுந்து போய்க் கதவை லேசாகத் தட்டுவேன். 'இதோ வரேன் என்று குரல் கொடுத்துவிட்டு, உடனே எழுந்து வருவார். நான் முடித்து வைத்திருக்கும் பக்கங்களை ஆர்வமுடன் பார்ப் பார். நறுக் கென்று சில கரெக்ஷன்கள் சொல்வார். ஐயோ... என் மூளைக்கு இது எப்படி எட்டாமல் போயிற்று?’ என்று தலையில் தட்டிக் கொள்கிற மாதிரியான கரெக்ஷனாக இருக்கும் அது. என் மனசில் ஒடும் எண்ணத்தைப் படித்தவர் போன்று, 298

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/316&oldid=824785" இலிருந்து மீள்விக்கப்பட்டது