பக்கம்:சாவி-85.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் தூங்கிக்கிட்டிருந்தவர் எழுந்து வந்து பளிச்சென்று ஒரு கரெக்ஷன் சொல்லிட்டாரே, எப்படி? நமக்கு அது தோணவே இல்லியே, ஏன்?னு யோசிக்கிறாயா நீ காலையிலேர்ந்து இதே வேலையா உழண்டுகிட்டிருக்கே நான் புதுகள் வெளியிலிருந்து வந்து பார்க்கிறேன். அதனாலதான் வெள்ளைத் துணியில கறுப்புப் புள்ளி பட்ட மாதிரி அந்தத் தப்பு மட்டும் பளிச்சென்று என் கண்ணுல படுது. நீ இதுக்காக ஒண்னும் கவலைப்படாதே என்பார். ஒருமுறை சாவி அவர்கள் வெளிநாடு போயிருந்தார். நாங்கள் சாவி’ இதழின் அந்த வாரத்துக்கான வேலையில் மும்முரமாய் ஈடுபட்டிருந்தோம். அன்றிரவு ஒரு மணிக்கு சாவி சார் வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்தார். காரிலிருந்து இறங்கியவர், நேரே என்னிடம் வந்து என் எதிரே உட்கார்ந்து கொண்டு என்ன... பேஜெல்லாம் முடிச்ச வரையில நான் பார்க்கலாமா என்றார். ஒருமுறை எனக்கு நல்ல ஜூரம் கண்டிருந்தது. ஆனால் அந்த வாரத்து இதழுக்கான கடைசி கட்ட வேலைகள் பாக்கி இருந்தன. ஆபீஸ் போனேன். ஜுரத்துடனேயே வேலை செய்து கொண்டிருந்தேன். நான் படும் சிரமத்தை ஆசிரியர் சாவி கவனித்தாரா இல்லையா என்றும் நான் கவனிக்கவில்லை. என் வேலையில் மூழ்கியிருந்தேன். சற்று நேரத்தில் என் முன் நிழலாடியது. நிமிர்ந்தேன். பதறி விட்டேன். சாவி சார் நின்றிருந்தார். ஒரு கையில் பெரிய கிண்ணம் நிறைய கரைக்கப்பட்ட ரசம் சாதம். மறுகையில் வெந்நீர் டம்ளர். போதாக்குறைக்கு, சட்டைப் பையிலிருந்து ஒரு குரோசின் மாத்தி ரையை எடுத்து நீட்டி, ரவி, முதல்ல இந்த ரசம் சாதத்தைக் குடி. மிளகு ரசம். குடிச்சா நல்லா கண கணன்னு இருக்கும். அப்புறம் இந்த மாத்திரையைப் போட்டுக்கோ என்றார். எனக்கு அவருடைய அன்பைத் தாங்க முடியவில்லை. 299

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/317&oldid=824786" இலிருந்து மீள்விக்கப்பட்டது