பக்கம்:சாவி-85.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 கண் கலங்கி விட்டேன். கூப்பிட்டிருந்தா நானே வந்திருப்பேனே நீங்க எதுக்கு...' என்றேன். 'நீ என் பத்திரிகையைக் கவனிச்சுக்கறே! உன்னை நான் கவனிச்சுக்க வேணாமா? சுயநலம்னுதான் வெச்சுக்கோயேன். என்று சிரித்தார். அந்த அளப்பரிய அன்பை, வெறும் முதலாளி தொழிலாளி உறவுடன் முடிந்து விடாத, ரத்தமும் சதையும் மட்டுமே தரக்கூடிய பாசத்தை வேறு எவரிடமும் நான் கண்டதில்லை. கோபம். கோபம்...' என்று சாவி அவர்களைப் பற்றிச் சொல்பவர்களைக் கண்டால் எனக்குக் கோபம் வரும். அந்தக் கோபத்தின் அடிநாதமாக இழையும் அன்பைப் புரிந்து கொள்ளத் தெரியாதவர்கள் அவர்கள் என்றுதான் சொல்வேன். கடைசியாக ஒன்று: சாவி இதழ் நிறுத்தப்பட்டு நான் விகடனில் வந்து சேர்ந்து ஐந்தாறு மாதங்கள் ஆனபின்பும் சாவி சாரைச் சென்று பார்க்கவே இல்லை. (அதற்கான காரணத்தைச் சுருக்கமாக எழுதவும் முடியாது.) அதன்பின் அவரது சதாபிஷேகத்தின்போது எனக்கு அழைப்பு அனுப்பியிருந்தார். போயிருந்தேன். என்னைப் பார்த்ததும் அவர் கேட்ட முதல் கேள்வி. 'உன்னை அவா நல்லா வெச்சுண்டிருக்காளா? அப்பா...! எவ்வளவு பாசமும் பரிவும் கொண்ட கேள்வி இது திருமணமாகிப் புகுந்த வீடு சென்ற தனது மகள் சில மாதங்கள் கழித்துப் பிறந்த வீடு வரும்போது, தன் மகளின் தலையைப் பரிவோடு வருடி ஒரு தகப்பனார் பாசத்துடன் கேட்கிற கேள்வியல்லவா இது?" 300

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/318&oldid=824787" இலிருந்து மீள்விக்கப்பட்டது