பக்கம்:சாவி-85.pdf/320

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 அவ்வளவு பொது விஷயங்களை நான் அந்தப் பயணத்தில் தெரிந்து கொண்டேன். அப்புறம் அமெரிக்கா, ஐரோப்பா பயணத்தின் போதும் என்னையும், என் மகன் நவீனையும் அழைத்துக் கொண்டு போனார். ஒரு மாதம் சுற்றுப் பயணம் செய்தபின் ஏதோ ஒரு பல்கலைக்கழகத்தில் பயின்று விட்டுத் திரும்பியது போலிருந்தது.' சாவியின் வாழ்க்கையில் அவர் மேற்கொண்ட உள் நாட்டுப் பயணங்களைவிட வெளிநாட்டுப் பயணங்களே அதிகம். அவரது முதல் வெளிநாட்டுப் பயணத்துக்கு வகை செய்தவர் காலம் சென்ற நண்பர் ஏர் ஃபிரான்ஸ் கோபால் அவர்கள். ஏர் பிரான்ஸ் விமான சர்வீஸ் முதல்முதல் ஜப்பானுக்குத் துவக்கப் பட்டபோது அதில் சாவியும் இடம் பெற்றிருந்தார். அடுத்ததாற்போல் சாவி மேற்கொண்ட வெளிநாட்டுப் பயணம் ரஷ்யாவுக்கும், கிழக்கு ஜெர்மனிக்கும். ரஷ்யப் பயணம் முடிவானதும், அதே பயணத்தில் கிழக்கு ஜெர்மனியையும் சாவி சென்று பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்தவர் சென்னையில் அந்நாட்டுத் தூதரகத்தில் கெளரவத் தொடர்பு அதிகாரியாக இருந்த சங்கரன் அவர்கள். அன்றைய அமைச்சர் க.ரா.சாராம், அமைச்சர் செ.மாதவன், டாக்டர் எம்.ஏ.எம்.ராமசாமி, கீதா ஹோட்டல் ஜெயராம அய்யர் போன்ற பிரமுகர்கள் காஞ்சி ஹோட்டல் கார்டனில் சாவியை வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்கள். எம்.ஏ.எம்.ராமசாமி அவர்கள் ஒரு பெரிய சூட்கேஸை சாவியிடம் தந்து திரும்பி வரும்போது இது நிறைய மேட்டர் கொண்டு வாருங்கள் என்று கூறியதை சாவி இப்போதும் மறக்காமல் சொல்லி மகிழ்கிறார். ஒவ்வொரு பயணக் கட்டுரை எழுதும்போது சாவி அதில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/320&oldid=824791" இலிருந்து மீள்விக்கப்பட்டது