பக்கம்:சாவி-85.pdf/321

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் கூடவே அழைத்துக் கொண்டு போவது போலவும், சென்ற இடங்களில் தன் மனசாட்சி கேட்ட சில கேள்விகளை கோபால்ராவ் மீது போட்டு அவர் கேட்பது போலவும், சாவி பதில் சொல்வது போலவும் ஒரு புதுமையான உத்தியைக் கையாண்டு எழுதினார். அந்தப் புதுமையான முயற்சியைப் பாராட்டி அமைச்சர் ராசாராம் ஒரு கூட்டத்தில் பேசினார். தொடர்ந்து பங்களாதேஷ் சுதந்திரம் பெற்ற சூட்டோடு டாக்கா போய் பங்களாதேஷின் தந்தை என்று போற்றப்பட்ட முஜிபுர் ரஹ்மானை தினமணி கதிர் சார்பில் பேட்டி காணும் அரிய வாய்ப்பு சாவிக்குக் கிடைத்தது. முஜிபுர் அவர்கள் கவியரசர் ரவீந்திரநாத் தாகூரிடம் தமக்குள்ள பெருமதிப்பைச் சொல்லி தாகூரின் சில பாடல்களைப் பாடிக் காட்டினார். பங்களாதேஷ் விடுதலை பெற்ற மூன்றாவது நாளே சாவிக்கு பேட்டி கிடைத்தது. பிரதமரை பேட்டி காண நூற்றுக் கணக்கான நிருபர்கள் காத்திருந்த நேரம் அது. பேட்டிக்கு ஐந்தே நிமிடங்கள்தான் ஒதுக்கப்பட்டிருந்த போதிலும் சாவியின் ஆர்வத்தையும் அக்கறையையும் கண்ட முஜிபுர் அவர்கள் பேட்டி நேரத்தை இருபது நிமிடங்களாக மாற்றிக் கொண்டார். இப்பயணங்களைத் தொடர்ந்து சாவியின் வெளிநாட்டுப் பயணங்கள் அடுத்தடுத்து நடைபெற்று வந்தன. அதுமட்டுமல்ல; அமெரிக்கா, ஜப்பான், ஐரோப்பா நாடுகளுக்குத் திரும்பத் திரும்பப் போய் வந்து கொண்டிருந்தார். ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்தையும் யாராவது ஸ்பான்ஸர் செய்ய வேண்டுமென்றோ, அந்த நாடுகளிலிருந்து ஏதேனும் அமைப்புகள் 303

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/321&oldid=824793" இலிருந்து மீள்விக்கப்பட்டது