பக்கம்:சாவி-85.pdf/322

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 அழைப்பு அனுப்பி வரவேற்க வேண்டுமென்றோ சாவி காத்திருப்பதில்லை. நினைத்தால் கிளம்பி விடுவார். 'மூன்று மாதங்கள் சென்னையில் அயராமல் உழைத்த பின்னர் ஒரு வாரம் எங்காவது ஒரு வெளிநாட்டுக்குப் போய் வந்தால்தான் என் பேட்டரி சார்ஜ் ஆகிறது என்பார் அவர் சாவிக்குப் பல நாடுகளிலும் நண்பர்கள் உண்டு. சாவியை உயிருக்குயிராக நேசிக்கும் நண்பர்கள் பலர். அவர்களில் முக்கிய மானவர் ஜப்பானில் இருந்த நாயர்ஸான். நாயர்ஸானின் வாழ்க்கை வரலாற்று நூலை சென்னையில் ஒரு சிறப்பான விழா நடத்தி சாவி வெளியிட்டபோது அந்த விழாவில் கலந்துகொள்ள நாயர்ஸான் ஜப்பானிலிருந்து வந்திருந்தார். அந்த ஆண்டு ஜப்பான் நாட்டு சக்கரவர்த்தி ஜப்பானியரல்லாத வருக்கு ஜப்பான் அரசு வழங்கும் உயரிய விருது' ஒன்றை நாயர் ஸானுக்கு வழங்கிக் கெளரவித்திருந்தார். நூல் வெளியீட்டு விழா நாயர்ஸான் பாராட்டு விழாவாகவும் அமைந்தது. நாயர்ஸான் சென்னையில் இருந்தபோது ஒருநாள் அவரைத் தமது வீட்டுக்கு காலை சிற்றுண்டிக்காக சாவி அழைத்து வந்ததை ஏ.வி.எம். சரவணன் அவர்கள் பெருமையோடு சொல்லிக் கொள்கிறார். 'நாயர்ஸான் என் வீட்டுக்கு வந்தது குறித்து நான் பெருமையடைந்தேன். மிகச்சிறந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரரும், ராஷ் பிஹாரி போஸ் போன்ற பெரும் தலைவர்களுடன் பழகும் வாய்ப்பு பெற்றவருமான நாயர்ஸான் அவர்களுக்கு நான் என் இல்லத்தில் அளித்த சிற்றுண்டி விருந்தின்போது செட்டி நாட்டு அயிட்டங்கள் பரிமாறப்பட்டன. சுவையான உணவு ரசிக ரான சாவி அந்த உணவு வகைகளைப் பற்றி நாயர்ஸானுக்கு விரிவாக விளக்கியது என்னுள் பசுமையாக இருக்கிறது என்கிறார் ஏ.வி.எம்.சரவணன். - புஷ்பலா மோகன் என்பவர் சாவியின் மற்றொரு நண்பர். 304

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/322&oldid=824794" இலிருந்து மீள்விக்கப்பட்டது