பக்கம்:சாவி-85.pdf/331

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் வேலூர்க்காரரான அவர் போலீஸில் சேர்ந்து கொஞ்ச நாள் தமிழ் நாட்டில் பணியாற்றியபின் ஜப்பான் சென்று டோக்கியோவில் மிகப் பெரும் செல்வந்தப் பெண்மணியான மேடம் மிட்ஸுயி அவர்களின் நம்பிக்கைக்குரியவராகி அவரது செயலாளராக வாழ்ந்து கொண்டிருந்தார். சாவி ஜப்பானுக்கு வருகிறார் என்றாலே புஷ்பலாவின் முகம் தாமரையாக மலர்ந்து விடும். அப்படியொரு நட்பு சாவி அவர்களுடன் நான் போயிருந்த இரண்டு சமயங்களிலும் அவர் எங்களை டோக்கியோ மட்டுமின்றி ஒஸாகா, கியோட்டோ, ஹிரோஷிமா, நாரா போன்ற நகரங்களுக்கும், கிராமப் பகுதிகளுக்கும் அழைத்துப் போய் சுற்றிக் காட்டி உபசரித்த விருந்தோம்பல் மறக்க முடியாதவை. நாயர்லான், புஷ்பலா மோகன் இருவருமே இப்போது உயிரோடு இல்லை. அயாகா ஹோரிஸான் என்ற ஜப்பானியப் பெண்மணியை சாவிக்கு அறிமுகப்படுத்தியவர் புஷ்பலா மோகன்தான். அப்புறம் அந்த நடுத்தர வயது மங்கை சாவியின் குடும்பத் தோழியாகவே மாறிவிட்டார். ஜப்பானியர்களுக்கு நல்ல ஆங்கிலம் தெரியாது என்று பொதுவான ஒரு கருத்து உண்டு. அது ஒரு காலம். இப்போது மாறிவிட்டது. திருமதி ஹோரிஸான் சாவிக்கு எழுதும் ஆங்கிலக் கடிதங்கள் இலக்கியம் என்று போற்றும் அளவுக்கு உயர்ந்து காணப்படும். ஜப்பான்அரசியல், கலாசாரம், இயற்கை வளம், பொருளாதாரம், வெயில், மழை என்று எதையும் விடாமல் சுவாரசியமாகக் கடிதம் எழுதுவார். டாக்டர் கலைஞரைப் பற்றிகூட ஹோரி லானுக்குத் தெரியும். ஏனெனில் அவருக்கு சாவி கடிதம் எழுதும் போதெல்லாம் கலைஞர் அவர்களின் புதுப்புது திட்டங்கள் பற்றி, அவருடைய பேச்சுத் திறன், எழுத்துத் திறன் பற்றி, தமிழ்ப் புலமை பற்றி விளக்கமாக எழுதுவார். இந்தக் கடிதப் போக்கு வரத்து நட்பு இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 305

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/331&oldid=824806" இலிருந்து மீள்விக்கப்பட்டது