பக்கம்:சாவி-85.pdf/332

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 ஹாங்காங் என்றாலே சாவிக்கு நினைவுக்கு வருபவர்கள் பாலன் சச்சித், அய்யூப், சுக்கூர் என்ற இனிய நண்பர்கள்தான். ஹாங்காங்கிற்கு சாவி போகும்போது ஒன்று பாலன் விடு அல்லது அய்யூப் வீட்டில்தான் தங்குவார். நண்பர் சுக்கூர் வீட்டில் ஒருவேளையாவது சாப்பிடாமல் வரமாட்டார். ஹாங்காங்வாழ் இந்தியர்களில் மெத்தப் படித்தவர் என்ற பெருமைக்குரியவர் பாலன். அங்கே ஒரு கல்லூரியில் நிர்வாகவியல் பேராசிரியராக இருந்து வருகிறார். சாவிக்கும் பாலனுக்கும் இடையே பொதுவான ஒற்றுமை நகைச்சுவை. பாலன் பேசத் தொடங்கினாலே ஜோக் மழைதான். சாவி வயிறு குலுங்கச் சிரித்து ரசிப்பார். ஒருமுறை 'சாவி ஹாங்காங் சிறப்பிதழ் தயாரிக்கும் பணி சம்பந்தமாக என்னையும் நண்பர் எக்ஸ்னோரா நிர்மல் அவர்களையும் அழைத்துப் போனார். நிர்மல் ஏற்கனவே இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மேலாளராக சில ஆண்டுகள் ஹாங்காங்கில் பணி புரிந்தவர். மிகச்சிறந்த புகைப்படக் கலைஞர். அவர் ஹாங்காங்கில் எடுத்த படங்கள்தான் சாவி சிறப்பிதழைப் பரிமளிக்கச் செய்தன. சாவி அவர்கள் ஜாதி, மத, பேதங்களுக்கு அப்பாற்பட்டவர் என்பதில் யாருக்காவது சந்தேகமிருந்தால் அவர்கள் சாவியை பாங்காக்கிலோ, ஹாங்காங்கிலோ பார்க்க வேண்டும். எந்த நேரத்திலும் அவரை இஸ்லாமியச் சகோதரர்கள் மொய்த்துக் கொண்டிருப்பார்கள். தாய்லாந்துவாழ் தமிழர் இலியாஸ் என்கிற இனிய நண்பரிடம் சாவிக்கு இதயபூர்வமான ஈடுபாடு உண்டு. சிதம்பரத்துக்காரரான இலியாஸ் தம்முடைய அயராத உழைப்பாலும் வியாபாரத் திறமையாலும் இன்று பேங்காக்கில் கொடி கட்டிப் பறக்கிறார். தாய்லாந்து அரசு இவரைப் பாராட்டிப் பல சான்றிதழ்கள் வழங்கியிருக்கிறது. மிகச்சிறந்த ஏற்றுமதியாளருக்கான பெருமைக்குரிய விருதையும் இவர் பெற்றிருக்கிறார். சாவி வருகிறார் என்றால் இலியாஸின் கார் பாங்காக் விமான நிலையத்தில் தயாராய்க் காத்திருக்கும். இலியாஸுக்குச் சொந்தமான உட்லண்ட்ஸ் இன் ஹோட்டலில் ஒரு அறை 306

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/332&oldid=824807" இலிருந்து மீள்விக்கப்பட்டது