பக்கம்:சாவி-85.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் சாவிக்காக எப்போதும் திறந்து வைக்கப்பட்டிருக்கும். அந்த அளவுக்கு சாவியின் நட்பைப் பெரிதும் மதித்துப் போற்றுபவர் இலியாஸ். சாவியுடன் செல்லும்போதெல்லாம் இலியாஸின் விருந்தோம்பலை நானும் அனுபவித்திருக்கிறேன். 'என்ன இலியாஸ், ஏதாவது பேசுங்க என்பார் சாவி. நீங்க பேசணும். நான் கேக்கணும். உங்க அனுபவங்கள்தானே எனக்குப் பாடம். நீங்க பேசுங்க... என்பார் இலியாஸ். இப்படி ஒரு ஆத்மார்த்தமான நட்பு பாங்காக்கில் சாவிக்கு மலர்ந்திருக்கிறது. சாவி பற்றி இலியாஸ் சொல்கிறார் : “தனக்குச் சற்று ஒய்வு தேவைப்படும் போதெல்லாம் பேங்காக் வந்து என் ஹோட்டலில் சாவி அவர்கள் தங்கிச் செல்வது வழக்கம். அப்போதெல்லாம் நான் அவருடன் பேசி புத்துணர்ச்சி பெறுவேன். அவரது சில நடவடிக்கைகள் முக்கிய மான பல பாடங்களை மெளனமாக நமக்குப் போதிக்கும். ஒரு முறை நான் அவரை என் வீட்டுக்கு அழைத்துப் போயிருந்தேன். வீடு சற்று உயரத்தில் இருப்பதால் பல படிகள் ஏறிச் செல்ல வேண்டும். சாவி வயதானவராயிற்றே, படியேற சிரமப்படுவாரே என்ற அக்கறையில் நான் சாவியின் கையைப் பிடித்து அழைத்துப் போக எண்ணி அவர் கையைப் பிடிக்கப் போனேன். ஆனால் அவர் என் கையைச் சட்டென்று உதறித் தள்ளிவிட்டார். எனக்குக் கொஞ்சம் சங்கடமாகிவிட்டது. ஏதும் தவறு செய்து விட்டோமோ என்று உள்மனம் உறுத்தியது. ஏன் ஸார் கையை உதறி விட்டீர்கள்?" என்று கேட்டேன். அதற்கு அவர் எனக்கு என்ன வயது என்று நினைக்கிறீர்கள்? என்று பதில் கேள்வி கேட்டார். 'எண்பதுக்கு மேல் இருக்கும் என்றேன். 'இல்லை... என் வயது இருபத்தைந்துதான்...' என்றவர் தொடர்ந்து 'இலியாஸ். உடலுக்கும் வயதுக்கும் சம்பந்தம் இருக்கலாமே தவிர மனதுக்கும் வயதுக்கும் சம்பந்தமில்லை. நான் எப்போதுமே 307

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/333&oldid=824808" இலிருந்து மீள்விக்கப்பட்டது