பக்கம்:சாவி-85.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 மனதளவில் இருபத்தைந்து வயதைத் தாண்டுவதில்லை. எனவே என்னால் முடியும். மனோதிடம்தான் வேண்டும். என்னால் நிச்சயம் முடியும். இந்தப் படிகளை நானே ஏறுகிறேன் பாருங்கள் என்று சொல்லிக் கொண்டே அத்தனை படிகளையும் மிக எளிதாக ஏறி வந்து விட்டார். அன்று அவரிடமிருந்து நான் ஒரு பெரிய பாடம் கற்றுக் கொண்டேன்." - பாங்காக் தமிழ்ச் சங்கத்தின் வெற்றிகரமான செயல் பாடுகளில் இலியாஸ் பெரும்பங்கு வகிப்பவர். அதேபோல அய்யூப் என்கிற நண்பரும் சாவிக்கு இணக்கமானவர். அய்யூப் அவர்களுக்கு ஹாங்காங்தான் தலைமையகம் என்றாலும் உலகின் மற்ற நாடுகளுக்கு வர்த்தக நிமித்தம் ஏதோ பக்கத்து வீட்டுக்குப் போய் வருவதுபோலப் போய் வருபவர். பாங்காக்கில் அவர் சகோதரர் ஹாமாயூன் அவர்களும் இருப்பதால் அடிக்கடி பாங்காக் போய்த் தங்கிவிட்டு வருவார். சாவி ஹாங்காங் போனாலும் பாங்காக் போனாலும் அய்யூப் வீட்டில் தஞ்சாவூர் பாணியில் தயாரிக்கப்படும் இட்லி சாம்பார் சாப்பிடாமல், ஸ்பெஷல் டீ குடிக்காமல் வருவதில்லை. சமீபத்தில் பல்துறைப் பிரமுகர்களின் வாழ்க்கையில் நடைபெற்ற மறக்க முடியாத சம்பவங்களை தங்க.காமராஜ் என்ற இளைஞர் தொகுக்க, அதை நூலாக வெளியிடுவதற்கான அத்தனை உதவிகளையும் செய்திருப்பவர் அய்யூப் அவர்கள்தான். மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு சாவி பலமுறை சென்றதுண்டு. முதன் முதலில் பினாங்கு நகருக்குச் சாவி போன போது அங்கு பெரும் தனவந்தரும், பிரபுல் வர்த்தகருமான ஆறுமுகம் பிள்ளை அவர்களின் நட்புக்குப் பர்த்திரமானார். திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் சாவி அவர்கள் பற்றி ஒர் அறிமுகக் கடிதம் எழுதி அனுப்பியிருந்தார். அரண்மனை போன்ற தமது வீட்டில் சாவியையும் அவரது மனைவியையும் தங்க வைத்து ஆறுமுகம் பிள்ளை உபசரித்த பாங்கு மறக்கக் 308

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/334&oldid=824809" இலிருந்து மீள்விக்கப்பட்டது