பக்கம்:சாவி-85.pdf/335

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் கூடியதல்ல. தமக்குச் சொந்தமான ஒரு மலைப் பகுதிக்குச் சாவியை அழைத்துப்போய் அங்கே மலை உச்சியில் உள்ள தமது பங்களாவில் தங்க வைத்தார். இந்த மலை முகட்டிலிருந்து பார்க்கும்போது எவ்வளவு தூரம் உங்களுக்குத் தெரிகிறது? என்று கேட்டார் ஆறுமுகம் பிள்ளை. ரொம்ப தூரத்துக்கு அப்பால் வானமும் பூமியும் சந்திக்கும் எல்லையைக் காட்டி அதுவரை தெரிகிறது: என்றார் சாவி. அதுவரைக்கும் நம்ம இடம்தான் என்று பிள்ளை சர்வ சாதாரணமாகச் சொன்னதை சாவியால் நம்ப முடியவில்லை. ஆறுமுகம் பிள்ளைக்கு அத்தனைப் பெரிய சொத்தும், நிலங்களும் உண்டு என்று திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன பிறகே சாவிக்கு நம்பிக்கை ஏற்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பின்னர் பிள்ளை அவர்கள் நோய் வாய்ப்பட்டு வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது சாவி தம்பதியர் வேலூர் போய் அவரைப் பார்த்துவிட்டு வந்தார்கள். பிள்ளை அவர்கள் மின்றிந்த பின்பும் அவரது மகன் நாகராஜனுடன் அந்த நட்பு தொடர்கிறது. சாவியால் மறக்க முடியாத மலேசிய நண்பர்களில் மிக முக்கியமானவர் நண்பர் வீ.செல்வராஜ். மலேசியாவின் புகழ்பெற்ற எழுத்தாளராகவும், மனிதநேயம் மிக்க பண்பாளராகவும் வாழ்ந்து வந்த - செல்வா என்று அழைக்கப்பட்ட- செல்வராஜ் மீது சாவி அவர்கள் ஆழ்ந்த அன்பும் நட்பும் கொண்டிருந்தார். சமீபத்தில் செல்வா திடீரென மாரடைப்பால் காலமானார் என்ற செய்தி கேட்டு சாவி அடைந்த துயரத்துக்கு அளவேயில்லை. "இதிகாசங்களையும், இலக்கியங்களையும் திரும்பத் திரும்பப் படிப்பதனால் தெரிந்து கொள்ளும் பல உண்மைகளைப் போல சாவி அவர்களோடு சில மணி நேரம் உரையாடினாலே போதும். பலப்பல உண்மைகள் புலப்படும். இது நான் அவரைச் 309

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/335&oldid=824810" இலிருந்து மீள்விக்கப்பட்டது