பக்கம்:சாவி-85.pdf/337

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் ஹலோ சொல்லாமல் சாவி வீடு திரும்ப மாட்டார். அவ்வளவு நண்பர்கள் அங்கே அவருக்கு. அவரோடு நானும் அடிக்கடி சிங்கப்பூர் போயிருப்பதால் அவர்கள் எல்லோரும் எனக்கும் நல்ல நண்பர்களாகி விட்டார்கள். நண்பர் யாகப் சாவி அவர்களின் உற்ற நண்பர். சிங்கப்பூரில் நாணயம் மாற்றும் (மணி சேஞ்சர்) தொழில் புரிந்து வரும் யாகப் அவர்கள் தமிழ்ப் பத்திரிகைகளில் மிகுந்த நாட்டம் உள்ளவர். கலைஞரிடம் மாறாத அன்பும் பக்தியும் உடையவர். கலைஞரின் தமிழ் அவருக்குக் கற்கண்டு மாதிரி. எனவே சாவியின்பால் அவர் ஈர்க்கப்பட்டதில் வியப்பில்லை. "சாவியுடன் பேசுவது எனக்கு டானிக் மாதிரி. அவர் ஒரு அனுபவச் சுரங்கம். எந்தப் பிரச்னையைச் சொன்னாலும் சாவியிடம் ஒரு தீர்வு இருக்கும். என்ன யாகப்?" என்று கேட்டுக்கொண்டே அவர் என் கடைக்குள் நுழையும் போதே மனம் மகிழ்ச்சியில் நிறைந்து போகும். சாதி மத பேதத்திற்குள் தன்னைத் திணித்துக் கொள்ளாத பரந்த மனம் படைத்த சாவியின் நட்பு என் வாழ்க்கையில் கிடைத்த மாபெரும் பரிசு' என்கிறார் யாகப். நண்பர் நாகராஜன் (ICFTU) சிங்கப்பூரில் சாவியின் நண்பர்களில் மிக முக்கியமானவர். சிங்கப்பூர் டிரேட் யூனியன் அலுவலகத்தில் ஜெனரல் செக்ரடரியாக இருப்பவர். என் வீட்டில் தங்கலாமே என்று வீட்டுச் சாவியை எடுத்துக் கையில் கொடுக்கும் உண்மையான நண்பர்களில் அவரும் ஒருவர். நாகராஜனும் அவர் மனைவி தேவகியும் சாவியின் குடும்ப நண்பர்கள். சிங்கப்பூர் சம்பவாங் துறைமுகப் பகுதியில் வசித்து வந்த ராஜாமணி குடும்பமும் சாவியின்பால் பாசம் பொழியும் குடும்பம். இப்போது ராஜாமணி அவர்கள் ஆஸ்திரேலியாவில் தம் குடும்பத் துடன் சொந்த வீடு கட்டிக் கொண்டு மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறார். சாவி அங்கே வரமாட்டாரா என்று தம் வீட்டைப் 311

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/337&oldid=824812" இலிருந்து மீள்விக்கப்பட்டது