பக்கம்:சாவி-85.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாவி - 85 பார்க்க மாட்டாரா என்று ஆவலாகக் காத்திருக்கிறார். ஒவ்வொரு முறை கடிதம் எழுதும்போதும் அழைப்பு விடுக்கிறார். சாவி மட்டும் ஆஸ்திரேலியா போனால் கங்காரு தன் குட்டியைப் பாசமுடன் தன் மடியில் வைத்துக் காப்பது போல ராஜாமணி தனது நட்பு மடியில் சாவியைப் போட்டு உபசரிப்பார் என்பதில் ஐயமில்லை. சாவியின் சிங்கப்பூர் வாழ் நண்பர்கள் பட்டியலில் ஆடிட்டர் நாராயணன் என்ற பெயர் இடம் பெறாமல் பட்டியல் முழுமை பெறாது. சிங்கப்பூரில் முன்னணியில் சிறந்து விளங்கும் இந்திய ஆடிட்டர்களில் நாராயணன் மிக முக்கியமானவர். அரசு வட்டாரத்திலும் அதிகாரிகளிடையிலும் அவர் மிகப் பிரபலம். சிங்கப்பூர் அரசின் கீழ் இயங்கும் தமிழர் நல அமைப்புகளில் நாராயணனுக்குப் பங்கு உண்டு. பொது அறிவு நிரம்பப் பெற்றவர். மனிதர்களைத் துல்லியமாக எடை போடும் ஆற்றல் மிக்கவர். உலக விவகாரங்கள் அவரது உள்ளங்கையில். செய்யும் தொழிலே தெய்வமெனக் கருதுபவர். உழைப்பால் உயர்ந்தவர். சிங்கப்பூரில் வாழும் புத்திசாலி இந்தியர்களில் நாராயணனும் ஒருவர். "ஒரு பத்திரிகை ஆசிரியராக மட்டுமின்றி, பத்திரிகையை விற்கத் தெரிந்த பிஸினஸ் அறிவும் சாவிக்குள் இருப்பதை ஒரு ஆடிட்டர் என்ற முறையில் நான் பலமுறை உணர்ந்திருக்கிறேன். நான் எவ்வளவோ படிக்கிறேன். ஆனால் சாவி சாரிடம் கொஞ்ச நேரம் உட்கார்ந்து அவரது வாழ்க்கை அனுபவங்களைக் கேட்டு விட்டு வீடு திரும்பும்போது ஏதோ புதிதாக ஒன்றைத் தெரிந்து கொண்ட உணர்வு எனக்குத் தோன்றும். எனவேதான் சாவியிடம் உரையாடும் வாய்ப்பை நான் தவறவிடுவதேயில்லை" என்கிறார் ஆடிட்டர் நாராயணன். அவரும் அவரது துணைவியார் ராதிகாவும் சாவியைத் தங்கள் உறவுக்காரர் போல் பாவித்து உபசரிக்கும் அழகே அலாதி. சாவி எங்கேயும் தனியாகப் பயணம் போகும் வழக்கம் 312

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/338&oldid=824813" இலிருந்து மீள்விக்கப்பட்டது