பக்கம்:சாவி-85.pdf/339

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராணிமைந்தன் இல்லாதவர் என்று ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன். ஒருமுறை ஒவியர் ஜெயராஜ் அவர்களை இத்தாலி, பிரான்ஸ், லண்டன், ஆர்ம்ஸ்டர்டாம், ஜெர்மனி, சுவிட்சர்லாந்து போன்ற ஐரோப்பிய நகரங்களுக்குக் கூட்டிப் போயிருந்தார். பொதுவாக பயணக் கட்டுரைகள் புகைப்படங்களோடுதான் வெளிவரும். சாவியின் அந்தப் பயணக் கட்டுரை ஜெயராஜ் அவர்களின் ஒவியங்களோடு வெளிவந்தது. ஒரு பத்திரிகையாசிரியர் தன் வெளிநாட்டுப் பயணத்தின்போது ஒரு ஓவியரையும் உடன் அழைத்துப் போய் ஸ்பாட் ஸ்கெச்சஸ் வரையச் சொல்லி அதையே தன் கட்டுரைக்குப் பயன்படுத்தியது அநேகமாக அதுதான் தமிழில் முதன்முறையாக இருக்கும் என்று நினைக்கிறேன். பல்பொருள் அங்காடியின் அதிபர் குடும்பம் சாவிக்கு மிகவும் பரிச்சயமான ஒன்று. சென்னையில் நீல்கிரீஸ் பொறுப்பாளராக இருக்கும் திரு. நடராஜன் அவர்கள் ஒருமுறை சாவியின் ஐரோப்பிய பயணத்தின்போது உடன் சென்றிருந்தார். 'ஒரு சிறந்த எழுத்தாளருக்குக் கிடைக்கக்கூடிய மாபெரும் கெளரவத்தை அப்போதுதான் நான் நேரில் பார்த்தேன். வெளி நாடுகளில் சாவிக்குத்தான் எத்தனை நண்பர்கள் எங்கே போனாலும் விமான நிலையத்தில் நண்பர்கள் வந்து காத்திருந்தார்கள். லண்டனில் பி.பி.சி. இயங்கும் புஷ் ஹவுஸை நான் சாவியுடன் போய்ப் பார்த்தபோது எனக்கு ஒரு த்ரில். எப்பேர்பட்ட நிறுவனம் பி.பி.சி. அதனுள் போய்ப் பார்ப்பது அத்தனை எளிதான காரியமல்ல. சாவி என்ற புகழ்மிக்க எழுத்தாளருடன் நான் போயிருந்ததால் எனக்கும் அந்த வாய்ப்பு கிடைத்தது" என்று சென்னை நீல்கிரீஸ் நடராஜன் பெருமையோடும் பேருவகையோடும் சொல்கிறார். பாரீஸ் நகரில் சாவிக்கு ஜமால் என்று ஒர் இனிய நண்பர். பாரீஸ் பல்கலைக்கழகத்தில் உடற்பயிற்சி, யோகா ஆசிரியராக இருக்கும் ஜமால், எழுத்து இலக்கியம் மீது ஆர்வமும் பற்றும் கொண்டவர். பிரான்ஸ் தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்தவர். 3.13

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சாவி-85.pdf/339&oldid=824814" இலிருந்து மீள்விக்கப்பட்டது